“போடுறா வெடிய!! இன்னும் எத்தன நாளைக்கு?”.. ‘இந்திய’ பெண்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய.. உச்ச நீதிமன்றத்தின் ‘பரபரப்பு’ தீர்ப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆண் பிள்ளைகளைப் போலவே பெண் பிள்ளைகளுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
பெண்களுக்கான சொத்துரிமை தொடர்பாக தொடுக்கப்பட்டிருந்த வழக்கு உச்சநீதிமன்றத்திடம் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை அல்லது சம பங்கு உண்டு என்று தீர்ப்பளித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது. பொதுவாகவே ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என்று முன்பே கூறப்ப்ட்டிருந்தாலும், பெண்களுக்கு எதில் எல்லாம் சொத்துரிமை இருக்கிறது, என்னென்ன சட்டங்களில் அவர்கள் தங்கள் உரிமைகளைக் கோரலாம் என பல்வேறு விதி மற்றும் விதி சாராத கோட்பாடுகள் நிலவிவந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மேற்கண்ட சந்தேகங்களை களைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்