'பிறந்தது இரட்டை குழந்தை'... 'ஆனா கொஞ்ச நேரம் கூட சந்தோசம் இல்ல'... 21 வயது இளம் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இரட்டை குழந்தை பிறந்து விட்டது என சந்தோசப்படுவதற்குள் அந்த குழந்தைகள் மரணமடைந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'பிறந்தது இரட்டை குழந்தை'... 'ஆனா கொஞ்ச நேரம் கூட சந்தோசம் இல்ல'... 21 வயது இளம் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், கடந்த 12-தேதியில் இருந்து ரெயில்வேத்துறை சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இதில் ஜராத் மாநிலம் வாபி என்று இடத்திலிருந்து 8 மாத கர்ப்பிணியான காயத்ரி தேவி, தனது கணவருடன் உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசிக்குப் பயணம் செய்தார். 21 வயதான அந்த பெண்ணிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது அந்த ரயில் பயணித்த பெண்கள் காயத்ரிக்குப் பிரசவம் பார்த்துள்ளார்கள்.

சிறிது நேரத்தில் காயத்ரி தேவிக்கு இரட்டை குழந்தை பிறந்தது. இரண்டும் ஆண் குழந்தைகள். ஆனால் 8 மாதத்திலேயே குழந்தை பிறந்ததால், இரண்டு குழந்தைகளின் எடை மிகக் குறைவாக இருந்தது. உடனே இந்த நிகழ்வு குறித்து ஆர்பிஎஃப்-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  அவர்கள் சிராத்து என்ற இடத்தில் ரயிலை நிறுத்த ஏற்பாடு செய்தனர். ரயில் நின்றதும் ஆம்புலன்ஸ் மூலம் காயத்ரி தேவி மற்றும் இரண்டு குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்

அங்குத் தாய்க்கும், குழந்தைக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில், மருத்துவர்களால் இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற முடியவில்லை. ஆனால் காயத்ரியைக் காப்பாற்றிவிட்டனர். இந்த சம்பவம் குறித்துப் பேசிய மருத்துவமனை தலைவர் டாக்டர் தீபக் சேத்,''பிறந்த இரட்டை குழந்தைகளும் குறை மாதத்தில் பிறந்துள்ளது. அதுவும் எடை குறைவாகப் பிறந்துள்ளது.

மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பாகவே ஒரு குழந்தை இறந்து விட்டது. மற்றொரு குழந்தை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. நாங்கள் ஆக்சிஜன் கொடுத்து அந்த குழந்தையைப் பிழைக்க வைக்க முயற்சித்தோம். ஆனால், குழந்தை இறந்து விட்டது’’ எனக் கூறினார்.

இரட்டை குழந்தைகள் பிறந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்குள், இரண்டு குழந்தைகளுக்கும் இறந்த சம்பவம் கடும் துயரத்தையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது.

மற்ற செய்திகள்