‘ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பெற்ற இளம்பெண்’.. டாக்டர் கொடுத்த ‘ஷாக்’ ரிப்போர்ட்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஒரே பிரசவத்தில் பெண்ணுக்கு 6 குழந்தைகள் பிறந்த அதிசயம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரத்தில் உள்ள பரோடா பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி மாலிக் (22). கர்ப்பிணியான இவருக்கு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளன. இதுகுறித்து தெரிவித்த மருத்துவர் ஆர்.பி.கோயல், ‘இது ஒரு சுகப்பிரசவம். ஒவ்வொரு குழந்தையின் எடையும் 500 கிராம் முதல் 790 கிராம் வரைதான் உள்ளது. ஆறு குழந்தைகளின் மொத்த எடை 3.65 கிலோ. இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளன. அந்த குழந்தைகளின் எடை 350 கிராம் முதல் 400 கிராம் வரை இருந்தது. பொதுவாக இரட்டையர்கள், மூன்று குழந்தைகள் பிறப்பது சாதரணமாக நிகழும், ஆனால் ஆறு குழந்தைகள் பிறப்பது மிகவும் அரிதானவை’ என தெரிவித்துள்ளார்.
அனைத்து குழந்தகளும் காலை 9 மணியில் இருந்து 9:30 மணிக்குள் பிறந்துவிட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பிரசவம் குறித்து தெரிவித்த மகளிர் மருத்துவத் துறையின் தலைவர் டாக்டர் அருணா குமார், ‘இது மிகவும் அரிதான ஒன்று. பில்லியன்களில் நிகழும் பிரசவம். கடந்த 30 ஆண்டுகளில் இதுபோன்ற பிரசவத்தை இப்போதுதான் நான் பார்க்கிறேன். குழந்தைகளின் எடை மிகவும் குறைவாக இருப்பதால் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவு’ என அவர் தெரிவித்துள்ளார்.