"தனியாகச் சென்ற பெண்.. பிரசவ வலிவந்து குழந்தை பெற்றதும் மயக்கம்!".. குழந்தையை தூக்கிச் சென்ற 'காட்டு' விலங்குகள்?
முகப்பு > செய்திகள் > இந்தியாஆக்ராவின் ஜோதாபுரம் கிராமப் பகுதியில் பொதுவெளிக்கு இயற்கை உபாதைக்காச் சென்ற பெண் ஒருவர் அங்கேயே குழந்தை பெற்றுள்ளார்.
ஆனால் அவரைக் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் தேடியுள்ளனர். பிறகு போலீஸாரின் உதவியுடன் ஓரிடத்தில் அவரைக் கண்டுபிடித்தபோது, அவர் மயக்க நிலையில் இருந்துள்ளார். அவரை மீட்டு அவரது மருத்துவமனையில் அனுமதித்த பின்னர், அப்பெண் தான் இயற்கை உபாதைக்காக சென்றபோது அங்கேயே தனக்கு குழந்தை பிறந்துவிட்டதாகவும், குழந்தை பிறந்ததும் தான் மயங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, அப்பெண் குழந்தை பெற்றதாகச் சொல்லப்படும் இடத்தில் குழந்தை இல்லாததால், குழந்தையை அருகில் இருந்த வனவிலங்குகள்தான் எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்துள்ளனர். மனிதர்கள் யாரேனும் குழந்தையை கையில் எடுத்திருந்தால், அப்பெண்ணையும் அவர்கள் மீட்டிருப்பார்கள் என்பதால் இத்தகைய முடிவுக்கு வந்துள்ளனர்.
குறிப்பிட்ட அந்த ஊரில், யார் வீட்டிலும் கழிவறை வசதிகள் செய்து தரப்படாததால், இவ்வாறு பொதுவெளிக்கு அவ்வூர் மக்கள் இயற்கை உபாதைக்காக செல்வதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
மற்ற செய்திகள்