‘இருக்க வேண்டியதுதான்’..‘அதுக்குனு இப்படியா?’.. கோவிலுக்குள் பெண்ணுக்கு நேர்ந்த கதி.. பரவும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெண்மணி ஒருவர், கோவிலுக்குள் இருந்த குட்டியானை சிலைக்குள் நுழைந்து சிலை வழிபாடு செய்ய முற்பட்டபோது, அவரின் உடல் சிக்கிக் கொண்டதால், வெளிவர முடியாமல் நீண்ட நேரம் போராடியுள்ளார்.
டி-ஷர்ட், ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்த 40 வயது மதிக்கத்தக்க இந்த பெண்மணி, அஹமதாபாத்தில் உள்ள கோயில் ஒன்றுக்குள் வைக்கப்பட்டிருந்த குட்டி யானை சிலையின் காலிடுக்கினுள் புகுந்து மாண்டா என்று சொல்லப்படும் மண்டி வழிபாடு செய்ய முற்பட்டுள்ளார்.
ஆனால் அவர் எதிர்பாராத விதமாக, அந்த யானைச் சிலையின் காலிடுக்கிற்குள் சிக்கிக் கொண்ட சம்பவம்,அங்கு கூடியிருந்தவர்களிடையே பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் கிளப்பியது. பின்னர் அங்கிருந்த சில பெண்கள் இந்த பெண்மணியை காப்பாற்ற முயற்சி செய்கின்றனர். அந்த பெண்மணியின் உடல்வாகுவுக்கு ஏற்ற இடமல்ல என்பதாலும், குறுகலான கேப்-தான் அது என்பதாலும் சிக்கிக்கொண்ட இந்த பெண்ணின் பரிதாப நிலையினை யாரோ ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.
ஒரு வழியாக யானைச் சிலையின் ஒருபுறத்தில் நுழைந்த பெண்மணியின் உடலை இன்னொரு புறம் பிடித்து இழுத்து சில பெண்கள் அவரை காப்பாற்றியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த பலரும், இந்த அளவிற்கு ரிஸ்க் எடுத்து வழிபட வேண்டுமா? என்று கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
Woman gets stuck in an idol while performing 'Maanta' rituals. pic.twitter.com/Usmw6F7WhC
— Ahmedabad Mirror (@ahmedabadmirror) June 22, 2019