கணவர் சொன்ன ‘அந்த’ வார்த்தை.. ஆடிப்போன மனைவி.. காவல்நிலையத்தில் கொடுத்த ‘பரபரப்பு’ புகார்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மனைவி மாற்று முறையில் நண்பருடன் வாழ கணவர் கட்டாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவர் சொன்ன ‘அந்த’ வார்த்தை.. ஆடிப்போன மனைவி.. காவல்நிலையத்தில் கொடுத்த ‘பரபரப்பு’ புகார்..!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் எஸ்.ஜி சாலை பகுதியில் வசித்து வரும் 40 வயதான பெண் ஒருவருக்கு, கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கணவரிடம் கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து தனது மனைவியை அவர் மோசமாக நடத்த ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.

Woman files complaint against husband for wife swapping arrangement

இதுகுறித்து அப்பெண் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் தெரிவித்துள்ளார். அதில், ‘எனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பது எனக்கு தெரியவந்ததும், எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட ஆரம்பித்தது. இதனால் மனைவி மாற்று (Wife swapping) முறையில் தனது நண்பர் ஒருவருடன் இருக்குமாறு எனது கணவர் என்னை துன்புறுத்தினார்.

Woman files complaint against husband for wife swapping arrangement

மேலும் எனது 11 வயது மகனை பிப்ரவரி மாதமே எனக்கு தெரியாமல் கூட்டிச் சென்று அவரது மாமா வீட்டில் மறைத்து வைத்துவிட்டார். இது தெரிந்ததும் என் மகனை பார்க்க அங்கு சென்றேன். ஆனால் அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை’ என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

Woman files complaint against husband for wife swapping arrangement

இதுகுறித்து தெரிவித்த போலீசார்,‘குழந்தையை மறைத்து வைத்தது மட்டுமல்லாமல், குழந்தைக்கு சமைக்கக் கூட சமையலறைக்குள் அப்பெண்ணை அனுமதிக்காமல் மாமனாரும், மாமியாரும் துன்புறுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் அப்பெண்ணை வலுக்கட்டாயமாக வீட்டை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனால் தனது மகனின் அறையிலேயே நீண்ட நாள்கள் அப்பெண் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது’ என தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மீது சட்டப்பிரிவுகள் 498(ஏ), 294(பி), 323 மற்றும் 114-கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்