அதுவும் உயிர்தானே.. தெரு நாய்க்கு தினமும் சாப்பாடு ஊட்டிவிடும் பெண்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாரயில் நிலையத்தில் நாய் ஒன்றுக்கு பெண்மணி தயிர் சாதம் ஊட்டிவிடும் சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.
Also Read | ஒத்த நம்பர் பிளேட்டுக்கு இவ்வளவு கோடியா.. மிரள வைத்த துபாய் ஏலம்..!
மனிதர்கள் பலருக்கும் நாய் வளர்ப்பது மிகவும் விருப்பத்திற்குரிய ஒன்றாக இருக்கிறது. எப்போதும் நம்முடனே இருக்க நினைக்கும் இந்த உயிர்கள் தனிமைகளை போக்கிவிடுகின்றன. வாலை ஆட்டிக்கொண்டு நம்முடைய செல்ல கண்டிஷன்களுக்கு கட்டுப்பட்டு இடையில் சேட்டைகளிலும் ஈடுபடும் நாய்களை பலரும் தங்களது உறவாகவே கருதுகின்றனர். அந்த வகையில் தெருநாய் ஒன்றுக்கு தினந்தோறும் சாப்பாடு சமைத்து அதனை ஊட்டியும் விடுகிறார் ஒரு பெண்.
ரயில்வே ஸ்டேஷன்
மேற்குவங்க மாநிலம் தும் தும் கண்டோன்மண்ட் ரயில்வே ஸ்டேஷனில் தான் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் தினந்தோறும் நடைபெற்று வருகிறது. இங்கு வழக்கமாக சுற்றித் திரியும் நாயை யாரும் கண்டு கொள்வதில்லை. ஆனால் ஒரு பெண்மணி மட்டும் பசியோடு அலையும் நாய்க்காக பரிதாபப்பட்டு இருக்கிறார். ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த அந்தப் பெண் தனது டிபன் பாக்ஸில் இருந்த தயிர் சாதத்தை எடுத்து ஊட்டி இருக்கிறார்.
அந்த நாயும் பாசத்தோடு சாப்பிட்டு இருக்கிறது. இந்தப் பெண்மணி இப்போது தினந்தோறும் தனது வீட்டில் சாப்பாடு செய்து அதனை இந்த நாய்க்கு ஊட்டி விடுகிறார். ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்மில் குழந்தையைப் போல அந்தப் பெண்மணிக்கு அருகே உட்கார்ந்து கொள்கிறது நாய். அவரும் தான் எடுத்து வந்த சாதத்தினை எடுத்து நீட்ட நாய் லாவகமாக அதை சாப்பிடுகிறது.
பெயர்
இந்த நாய்க்கு குதூஷ் என பெயரிடப்பட்டிருக்கிறது. ஐந்து வயதாகும் குதூஷ் மிகப்பெரிய இசைப் பிரியராம். சோகத்தில் உள்ள போது இசை கேட்பது குதூஷ்க்கு மிகவும் பிடிக்குமாம். இப்படி தினந்தோறும் அந்த நாய்க்கு சோறு போட்டு வந்த இந்தப் பெண்மணி இதனையே தனக்கு வழக்கமாக மாற்றிக் கொண்டுள்ளார்.
தற்போது தனது வீட்டில் மூன்று வேளையும் சமைத்து அதனை ரயில்வே நிலையத்திற்கு எடுத்து வரும் இந்த பெண்மணி நாயை பாசத்துடன் அருகில் அழைத்து, கீழே அமர்ந்தவாறு ஊட்டியும் விடுகிறார். இது காண்போரை நெகிழ வைத்து இருக்கிறது. பாசங்களை மறந்து பல்வேறு காரணங்களுக்காக ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மத்தியில் ரயில்வே ஸ்டேஷனில் பசியுடன் சுற்றித் திரிந்த நாய்க்காக தனது வீட்டில் சாப்பாடு சமைத்து எடுத்து வந்து தினமும் ஊட்டிவிடும் இந்த பெண்மணியின் செயல் பலரையும் ஈர்த்துள்ளது.
மேற்குவங்க மாநில ரயில் நிலையத்தில் நாய் ஒன்றுக்கு பெண்மணி தயிர் சாதம் ஊட்டிவிடும் சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்