Friend Request அனுப்புன இளம்பெண்.. குஷியான நபருக்கு கொஞ்ச நாள்ல பெண் கொடுத்த அதிர்ச்சி.. நொந்துபோய்ட்டாரு மனுஷன்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிரா மாநிலத்தில் பேஸ்புக் மூலமாக பழகிவந்த பெண் ஒருவர் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக ஒருவர் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்.
இணையத்தின் வளர்ச்சி மனித குலத்திற்கு பல நன்மைகளை கொடுத்திருக்கிறது. தகவல் தொடர்பு துறை இன்றைய நவீன உலகில் மிகப்பெரும் உயரத்தை அடைந்திருக்கின்றன. உலகின் ஒரு மூலையில் நடைபெறும் நிகழ்வுகளை நாம் அடுத்த வினாடியே தெரிந்துகொள்ள முடிவதற்கு நமக்கு இணையம் உதவுகிறது. ஆனால், அதையே மோசடி வழிக்கும் சிலர் பயன்படுத்துகிறார்கள். தகவல் திருட்டு, ஆன்லைன் மூலம் பணம் மோசடி ஆகியவற்றில் ஈடுபடும் நபர்கள் சமீப காலங்களில் அதிகரித்திருக்கின்றனர்.
இவர்களை தடுக்க காவல்துறையினரும் அவ்வப்போது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் இணையத்தை தவறான வழியில் பயன்படுத்துபவர்கள் தொடர்ந்து மோசடி செயல்களை நிகழ்த்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். அந்தவகையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த ஒருவர் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.
வீடியோ கால்
நாக்பூரை சேர்ந்த ஒருவருக்கு பேஸ்புக்கில் கடந்த ஆகஸ்டு 14 ஆம் தேதி இளம்பெண் ஒருவருடைய பெயரில் Friend Request வந்திருக்கிறது. அவரும் அதை அக்செப்ட் செய்திருக்கிறார். தொடர்ந்து அந்த பெண்ணுடன் 4,5 நாட்கள் சாட் செய்து வந்திருக்கிறார் அந்த நபர். ஒருநாள் பேஸ்புக் வாயிலாக அந்த நபரின் போன் நம்பரை அறிந்த அந்தப்பெண் அவருக்கு வீடியோ கால் செய்திருக்கிறார்.
வீடியோவில் பேசும்போது அந்த பெண் அநாகரீகமாக நடந்துகொண்டதாக தெரிகிறது. அப்போது அந்த வீடியோ காலை தனது போனில் ரெக்கார்ட் செய்திருக்கிறார் அந்த பெண். அதைத் தொடர்ந்து, அடுத்தநாள் அவருக்கு போன் செய்த இளம்பெண், தனக்கு 10 ஆயிரம் ரூபாய் வேண்டும் என கேட்டிருக்கிறார். அவரும் பணத்தை அனுப்பியிருக்கிறார். அன்றைய தினமும் வீடியோ கால் செய்த இளம்பெண் தொடர்ந்து அநாகரிகமாக நடந்ததாக தெரிகிறது. ஆனால், அதையும் அந்த பெண் ரெக்கார்ட் செய்து வைத்திருக்கிறார்.
மிரட்டல்
இதனையடுத்து தனக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுக்கவில்லை என்றால் இந்த வீடியோவை இளையதளங்களில் வெளியிட்டுவிடுவேன் என இளம்பெண் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த நபர் பணத்தை அனுப்பியிருக்கிறார். ஆனால், மீண்டும் 1 லட்ச ரூபாய் வேண்டும் என அந்த பெண் கூறவே வேறுவழியின்றி அந்த பெண்ணின் வங்கிக்கணக்கிற்கு 1 லட்ச ரூபாயை அனுப்பியிருக்கிறார் பாதிக்கப்பட்டவர்.
இதனையடுத்து மருத்துவராக பணிபுரிந்து வரும் பாதிக்கப்பட்ட நபர் இதுகுறித்து அஜ்னி நிலைய காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக, வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் அந்த இளம்பெண்ணை வலைவீசி தேடிவருகின்றனர்.
மற்ற செய்திகள்