Video: ஆத்தி! ஏதோ டிராவல் பேக் மாதிரி 'இவ்ளோ' வேகமா இழுத்துட்டு வர்றாங்க... வீடியோவை பார்த்து 'அரண்டு' போன நெட்டிசன்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாட்டி ஒருவர் பாம்பை வேகமாக இழுத்துக்கொண்டு வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா அவ்வப்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விலங்குகள், பறவைகள், காடுகள் தொடர்பான வீடியோக்களை பகிர்ந்து கொள்வது வழக்கம். அந்த வகையில் அண்மையில் அவர் பகிர்ந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், ''பாட்டி ஒரு பாம்பை நடத்தும் முறை இதுவல்ல,'' என தெரிவித்து அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் பாட்டி ஒருவர் வேகமாக வருகிறார். அவரது கையில் மிகப்பெரிய பாம்பு ஒன்று உள்ளது. அதன் வாலைப்பிடித்து அவர் இழுத்து வரும் வேகத்தில் அந்த பாம்பு ஒன்றும் செய்ய முடியாமல் திணறுகிறது. முடிவில் சற்று தூரம் சென்று அந்த பாம்பை சுழற்றி எறிகிறார்.
Grandma that’s not the way to treat a COBRA😳 pic.twitter.com/RkQg8gdBQk
— Susanta Nanda IFS (@susantananda3) May 26, 2020
இந்த வீடியோவை இதுவரை சுமார் 2 லட்சம் பேர் வரை பார்த்து ரசித்துள்ளனர். இதுகுறித்து நெட்டிசன்கள் பாட்டிக்கு இந்த பாம்பு விஷயத்தில் மிகுந்த அனுபவம் உள்ளது போல என்றும், இவர் பாடிகார்டாக போனால் கையில் சிக்குபவர்களை இப்படித்தான் தூக்கி எறிவார் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்