‘டாக்டர்கள் அளித்த தவறான தகவலால்’.. ‘புதிதாக திருமணமான இளம் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சிம்லாவில் தனியார் மருத்துவமனை ஒன்று அளித்த தவறான தகவலால் இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘டாக்டர்கள் அளித்த தவறான தகவலால்’.. ‘புதிதாக திருமணமான இளம் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்’..

சிம்லாவைச் சேர்ந்த புதிதாக திருமணமான இளம்பெண் ஒருவர் கர்ப்பமடைவதில் இருந்த சிக்கலுக்காக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சோதனை முடிவில் அவருக்கு எய்ட்ஸ் இருப்பதாகக் கூறியுள்ளனர். இதைக் கேட்டு மனமுடைந்த அந்தப் பெண் அதிர்ச்சியில் கோமா நிலைக்குச் சென்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அதிக அதிர்ச்சியால் தொடர்ந்து கோமாவிலேயே இருந்த அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் அவரது எய்ட்ஸ் தொடர்பான சோதனை முடிவுகளை அரசு மருத்துவமனையில் மறுபடியும் பரிசோதித்து பார்த்தபோது அவருக்கு எய்ட்ஸ் இல்லை என்பதும், தனியார் மருத்துவமனை தவறான தகவலைக் கூறியுள்ளதும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள அம்மாநில முதலமைச்சர், “கவனக்குறைவாக செயல்பட்ட மருத்துவமனை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உரிய நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்துள்ளார். நோய் இல்லாத ஒரு பெண்ணிற்கு நோய் இருப்பதாக மருத்துவமனை கூறிய தகவலால் அவர் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHIMLA, HIV+, AIDS, WOMAN, COMA, SHOCK