தயவு செஞ்சு 'வெளிய' போயிடுங்க...! ஏன் நான் போகணும்...? 'ஹோட்டல் உள்ளே விட மறுத்த நிர்வாகம்...' - 'காரணத்தைக்' கேட்டு 'அதிர்ந்து' போன பெண்மணி...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் இளம்பெண் ஒருவர் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தயவு செஞ்சு 'வெளிய' போயிடுங்க...! ஏன் நான் போகணும்...? 'ஹோட்டல் உள்ளே விட மறுத்த நிர்வாகம்...' - 'காரணத்தைக்' கேட்டு 'அதிர்ந்து' போன பெண்மணி...!

இந்தியாவில் பெண்களின் மதிப்பு மிகுந்த ஆடையாகவும், பாரம்பரிய உடையாகவும் கருத்தப்படுவது புடவை. ஆனால் டெல்லி ஹோட்டல் ஒன்றில் புடவை கட்டிய பெண்ணுக்கு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Woman denied entry into Delhi hotel for wearing saree viral video

தங்கள் ஹோட்டல் உள்ளே நுழைய சில விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி, பாரம்பரிய உடைகள் அணிந்து வருகிறவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தியாவின் பாரம்பரிய ஆடைகளின் பட்டியலில் புடவை இல்லை. இந்த சம்பவம் ஒரு பெண்மணி மூலமே தெரியவந்துள்ளது. அவர் பாரம்பரிய உடை தானே என்று புடவையை அணிந்து சென்றுள்ளார்.

ஆனால், நுழைவாயிலில் உள்ள பெண் ஹோட்டல் ஊழியர் புடவை அணிந்து வர அனுமதி இல்லை என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் ஹோட்டல் ஊழியரிடம் ஏன் அனுமதிக்க மாட்டீர்கள் என்று கேட்க, 'எங்கள் ஹோட்டலில் ஸ்மார்ட் கேஷுவல் மட்டுமே அனுமதிக்கிறோம். புடவை ஸ்மார்ட் கேஷுவலின் கீழ் வராது' எனக் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்தான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதோடு, இந்த வீடியோவை டிவீட்டரில் பதிவிட்ட அந்த இளம்பெண், 'இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக இருக்கும் புடவை இனி பாரம்பரிய உடை பட்டியலில் இல்லை. அப்படியென்றால் இந்தியாவின் அசல் பாரம்பரிய உடை தான் என்ன?' என்று பதிவிட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்