'நடுவானில் பிறந்து'... 'பூமிக்கு வந்த க்யூட் பேபி!'... 'விமான நிலையத்தில் பரபரப்பு'...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கத்தாரில் இருந்து தாய்லாந்து நோக்கிப் பறந்து கொண்டிருந்த விமானத்தில், பெண் ஒருவருக்கு இந்திய வான்பரப்பில் பிரசவம் நடந்துள்ளது.

'நடுவானில் பிறந்து'... 'பூமிக்கு வந்த க்யூட் பேபி!'... 'விமான நிலையத்தில் பரபரப்பு'...

கத்தார் தலைநகர் தோகாவிலிருந்து பயணிகள் விமானம் ஒன்று தாய்லாந்து நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த நிறைமாத கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, விமானப் பணிப்பெண்களின் உதவியுடன் அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது.

இந்திய வான்பரப்பில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது அப்பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதன் காரணமாக, விமானி அவசர உதவியை தொடர்புகொண்டுள்ளார். விமானியின் அழைப்பையேற்று கொல்கத்தா விமான நிலையத்தில் விமானம் அதிகாலையில் தரையிறக்கப்பட்டது.

தாயும், சேயும் சிகிச்கைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த செய்தியை, கத்தார் விமான நிறுவனம் மகிழ்ச்சியுடன் டிவிட்டரில் தெரிவித்தது. தாயும், குழந்தையும் நலமாக உள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய கொல்கத்தா விமான நிலைய அதிகாரி,"செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு மருத்துவ உதவிக்காக விமானம் தரையிறங்க அனுமதி கேட்கப்பட்டது. 3.10 மணிக்கு விமானம் தரையிறங்கியது. விமான நிலையத்தில் இருந்த மருத்துவ அதிகாரிகள் விமானத்துக்கு உடனடியாக விரைந்தனர். ஆனால், நடுவானில் அந்தப்பெண்ணுக்கு குழந்தை பிறந்திருந்தது. இதையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். குடிவரவு அனுமதிக்குப் பின்னர் 4.25 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து 5.50 மணிக்கு அந்த விமானம் மீண்டும் புறப்பட்டது" என்றார்.

FLIGHT, WOMAN, BABY