‘ஒவ்வொரு வருஷமும் அண்ணன் வருவாரு’.. ‘ஆனா இந்த வருஷம் வரல’ அதனால... நெகிழ்ச்சி அடைய வைத்த பெண் காவலர்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெண் காவலர் ஒருவர் தனது அண்ணனின் நினைவாக அவர் உபயோகித்த துப்பாக்கிக்கு ராக்கி கட்டிய சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

‘ஒவ்வொரு வருஷமும் அண்ணன் வருவாரு’.. ‘ஆனா இந்த வருஷம் வரல’ அதனால... நெகிழ்ச்சி அடைய வைத்த பெண் காவலர்..!

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தல் பணிக்காக நில்வாயா என்னும் பகுதிக்கு ராகேஷ் என்ற காவலர் சென்றுள்ளனர். இப்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக மக்கள் ஓட்டுபோடாமல் இருப்பதால் அதுகுறித்து செய்தி சேகரிக்க தூர்தர்ஷன் செய்தி குழு சென்றுள்ளது. அவர்களுக்கு பாதுகாப்புக்காக ராகேஷும் உடன் சென்றுள்ளார். அப்போது நக்சல்கள் நடத்திய தாக்குதலில் ராகேஷ், தூர்தர்ஷன் கேமாராமேன் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனால் ராகேஷின் காவலர் பணி அவரது சகோதரியான கவிதா கௌசலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆண்களை சகோதரர்களாக கருதி அவர்களது கையில் பெண்கள் ராக்கி கட்டும் ரக்‌ஷா பந்தன் விழா நேற்று இந்தியா முழுவதும் நடைபெற்றது. இதனால் கவிதா தன் அண்ணன் பயன்படுத்திய துப்பாக்கியை காவல் துறை உயர் அதிகாரிகளின் அனுமதியுடன் வாங்கியுள்ளார். பின்னர் தனது அண்ணனுக்கு ராக்கி கட்டுவதாக எண்ணி அவர் பயன்படுத்திய துப்பாக்கிக்கு ராக்கி கட்டியுள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த அவர்,  ‘ஒவ்வொரு ஆண்டும்  ரக்‌ஷா பந்தன் தினத்தில் என் அண்ணன் என்னை சந்திக்க வருவார். ஆனால் இந்த ஆண்டு அவர் இல்லை. பாதுகாப்பு அதிகாரிகளையும், மக்களையும் நக்சல்கள் பதுங்கி இருந்து தாக்குகின்றனர். எனக்கு காவலர் வேலை கிடைத்ததும் என் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு என் அண்ணன் பயன்படுத்திய துப்பாக்கியை கேட்டு வாங்கினேன்’ என தெரிவித்துள்ளார்.

CHHATTISGARH, POLICE, CONSTABLE, WOMAN, RAKHI, BROTHER, GUN