”கிரிக்கெட் மட்டையால் ஓங்கி அடித்து... சார்ஜர் ஒயரால் கழுத்தை இறுக்கி”.. பிச்சை எடுத்து வந்த 4 அடுக்குமாடி ஓனர் மாமியாருக்கு மருமகளால் நேர்ந்த கதி!
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பையில் 4 அடுக்குமாடி வீடுகளுக்கு உரிமையாளராக இருந்தும் பிச்சை எடுத்து வந்த பெண்மணியை அவருடைய மருமகள் வெவ்வேறு விதங்களில் ஒரே நேரத்தில் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் 70 வயதான சஞ்சனா என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கணவரை இழந்து, குழந்தை இல்லாத சூழ்நிலையில் தினேஷ் என்பவரை தத்தெடுத்து வளர்த்து வந்தார். இதனையடுத்து சஞ்சனா, தினேஷ் மற்றும் அவருடைய மனைவி அஞ்சனா ஆகியோர் அடுக்குமாடி வீட்டில் வசித்து வந்தனர். சஞ்சனாவுக்கு சொந்தமாக 4 அடுக்குமாடி வீடுகள் இருந்தும் அவர் கோயில் வாசலில் பிச்சை எடுத்து வந்துள்ளார்.
இந்த சூழலில்தான் உயிருக்கு போராடிய நிலையில் சஞ்சனா, அஞ்சனாவால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தனது மாமியார் கழிப்பறையில் வழுக்கி விழுந்து விட்டதாக மருத்துவர்களிடம் கூறியுள்ளார் அஞ்சனா. ஆனால் உடலில் இருந்த காயங்களை பார்த்து சந்தேகமடைந்து மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே சஞ்சனா இறந்துபோக சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரிடம் அஞ்சனா தான்தான் மாமியாரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதுபற்றி போலீசாரிடம் கூறிய அவர் சஞ்சனா தினமும் பணத்தை வீட்டில் மறைத்து வைத்துவிட்டு அதை மறந்து விடுவார். பின்னர் அது குறித்து அவரிடம் கேட்கும்போது இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை உண்டாக்கியதாகவும், மேலும் நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளை தன் பெயருக்கு எழுதிக் கொடுக்குமாறு மாமியார் சஞ்சனாவிடம் அஞ்சனா அடிக்கடி கேட்டு வற்புறுத்தியதாகவும் கூறியுள்ளார்.
இதனால் சம்பவத்தன்று உண்டான சண்டை அஞ்சனாவை ஆத்திரமூட்டியதையடுத்து மாமியார் சஞ்சனாவை அஞ்சனா கிரிக்கெட் மட்டையால் தாக்கியுள்ளார். அதில் மாமியார் இறக்காததால் பாவாடை நாடாவை எடுத்து கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றுள்ளார். அப்போதும் மாமியார் இறக்கவில்லை. இதனையடுத்து செல்போன் சார்ஜரை எடுத்து கழுத்து நெரித்துள்ளார். அதன் பின்னர்தான் மருத்துவமனைக்கு மாமியாரை கொண்டு வந்து, பாத்ரூமில் வழுக்கி கீழே விழுந்து விட்டதாக நாடகமாடி இருக்கிறார் அஞ்சனா. இதையெல்லாம் விசாரணையின்போது அறிந்த போலீசார் அஞ்சனாவின் உள்ளாடையில் மாமியார் சஞ்சனாவின் நகைகள் மறைத்து வைக்கப்பட்டதையும் கண்டுபிடித்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் அஞ்சனாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்