'மின்சார' ரயிலில் திருடிய 'பார் அழகி'...'53 திருட்டு' வழக்குகளில் தொடர்பு... 'திருடிய' பணத்தில் என்ன செய்துள்ளார் தெரியுமா?...
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பையில் மின்சார ரெயிலில் பெண் பயணிகளிடம் திருடி வந்த பார் அழகியை போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகை, செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மும்பை துறைமுக வழித்தடத்தில் செல்லும் மின்சார ரயில்களில் பெண்களை குறிவைத்து நகை, பர்சுகள் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவதாக மும்பை வடாலா ரயில்வே போலீசாரிடம் புகார்கள் அளிக்கப்பட்டன.
இதையடுத்து, புகாரை பதிவு செய்த போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் புர்கா அணிந்த பெண் ஒருவர் திருட்டில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த பெண்ணை சுற்றிவளைத்து போலீசார் பிடித்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பெயர் யாஸ்மின் ஷேக் என்பதும், அவர் கோவண்டியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் மும்பையில் பார் ஒன்றில் நடன அழகியாக பணியாற்றியதும், பார் மூடப்பட்டதால் வேலையின்றி தவித்த அவர் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் அவர், தான் திருடிய பணத்திலிருந்து கோவண்டியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் புதிதாக வீடு ஒன்றை வாங்குவதற்காக முன்பதிவு செய்து உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவருக்கு 53 திருட்டு சம்பவங்களில் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து யாஷ்மினின் வீட்டில் இருந்து 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள், செல்ஃபோன்கள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.