'ஒரு பொண்ணு புகார் கொடுத்தா என்ன நடக்கும்ன்னு தெரியுமா'?... 'எம்மா, நான் பாவப்பட்ட குடும்பம்'... 'எவ்வளவோ எடுத்து சொன்ன கேப் டிரைவர்'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாவாடகை கார் ஒன்றில் அதன் ஓட்டுநருக்கும், அதில் பயணித்த பெண்ணுக்கும் நடந்த வாக்குவாதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாடகை காரில் பயணிப்பவர்களுக்கும், அதன் ஓட்டுநர்களுக்கும் அவ்வப்போது சில உரசல்கள் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் இளம்பெண் ஒருவர் கேப் ஒன்றை புக் செய்து அதில் பயணம் செய்துள்ளார். அவர் இறங்க வேண்டிய இடம் வந்தவுடன் அந்த ஓட்டுநர், மேடம் நீங்கள் குறிப்பிட்ட இடம் வந்து விட்டது எனக் கூறி வண்டியை நிறுத்தியுள்ளார்.
பின்னர் கேப் புக் செய்யும் செயலியில், அந்த பெண் பயணம் செய்ததற்கான தொகை எவ்வளவு என்பதைப் பார்த்து, அவரிடம் ஓட்டுநர் கூறியுள்ளார். அதற்கு அந்த பெண், நான் இங்கே இறங்கவில்லை, இன்னும் சிறிது தூரத்தில் கொண்டு இறக்கி விடுங்கள் என அந்த ஓட்டுநரிடம் அந்த பெண் கூறியுள்ளார். அதற்கு அவர், மேடம் என்னால் அப்படிச் செய்ய முடியாது, அதற்கு நீங்கள் வேறு கேப் தான் புக் செய்ய வேண்டும், அதோடு நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்ட இடம் இது தான். எனக்கும் வேறு சவாரி உள்ளது எனவே நீங்கள் இங்கையே இறங்கி கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.
ஆனால் அந்த பெண்ணோ கண்டிப்பாக என்னால் இறங்க முடியாது, நீங்கள் என்னை நான் சொல்லும் இடத்தில் கொண்டு தான் விட வேண்டும் என உறுதியாகக் கூறியுள்ளார். இது இருவருக்குள்ளும் வாக்கு வாதமாக மாறியது. நிலைமை கை மீறிச் செல்வதை அறிந்த அந்த ஓட்டுநர் உடனே தனது மொபைல் கேமராவில் வீடியோ எடுக்க ஆரம்பித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், நான் யார் தெரியுமா, நான் உன் மீது புகார் அளித்து உன்னை சும்மா விட மாட்டேன்.
நாங்கள் புகார் அளித்தால் உடனே நடவடிக்கை எடுப்பார்கள் என மிரட்டியுள்ளார். அதற்கு அந்த கேப் ஓட்டுநர், நீங்கள் சொன்ன இடத்தில் தான் உங்களை இறக்கி விட்டுள்ளேன். இதற்கு மேல் நான் என்ன செய்ய வேண்டும். நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து கொள்ளுங்கள் எனக் கூறியதோடு அனைத்தும் வீடியோ பதிவாக எடுத்துக் கொண்டார். பின்னர் அந்த பெண் அவரின் நண்பரை மொபைலில் அழைத்து நடந்த சம்பவங்களைக் கூறிய நிலையில், அதோடு அந்த வீடியோ நிறைவு பெறுகிறது.
இதற்கிடையே அந்த பெண் செய்தது முற்றிலும் தவறு எனப் பதிவிட்டுள்ள நெட்டிசன்கள், அந்த கேப் ஓட்டுநர் வீடியோ எடுத்தது மிகவும் நல்லதாகப் போனது. இல்லையென்றால் அவர் நிச்சயம் பிரச்சனையில் சிக்கியிருப்பர் எனப் பலரும் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள். இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது, எப்போது எடுக்கப்பட்டது என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
மற்ற செய்திகள்