'எல்லாம் சரி ஆயிடும்னு ஆசையோடு காத்திருந்த இளம் பெண்...' சிகிச்சை அளித்த டாக்டர் போட்ட அந்த ’நம்பிக்கை’ ட்வீட்...! திடீரென அத்தனையும் 'சுக்குநூறாக' உடைந்து போன பரிதாபம்! - என்ன நடந்தது?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனாவினால் பாதிகாப்பட்ட பெண் ஒருவர் முகத்தில் ஆக்சிஜன் மாஸ்க் பொருத்தப்பட்ட நிலையில் 'லவ் யூ ஜிண்டகி'  பாடலை பாடியது இணையதளங்களில் வைரலானது.

'எல்லாம் சரி ஆயிடும்னு ஆசையோடு காத்திருந்த இளம் பெண்...' சிகிச்சை அளித்த டாக்டர் போட்ட அந்த ’நம்பிக்கை’ ட்வீட்...! திடீரென அத்தனையும் 'சுக்குநூறாக' உடைந்து போன பரிதாபம்! - என்ன நடந்தது?

அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மோனிகா லாங்கே ட்விட்டரில், ஷாருக்கான் மற்றும் ஆலியா பட் நடித்த 'டியர் ஜிண்டகி' திரைப்படத்தில் வரும் 'லவ் யூ ஜிண்டகி' என்னும் பாடல் பின்னணியில் ஒலிக்க, கொரோனா தொற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஆக்சிஜன் மாஸ்க்கோடு இருக்கும் வீடியோவை கடந்த மே-13 அன்று ட்விட்டரில்  பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ அப்பெண்ணின் மனவலிமையை காட்டுவத்தோடு மற்றவருக்கும் தன்னம்பிக்கையை அளிக்கும் எனவும் மருத்துவர் லாங்கே கூறியிருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரையும் உற்சாகமூட்டியது என்றே கூறவேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக டாக்டர் லாங்கே தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், 'துணிச்சலான, தைரியமிக்க ஒரு ஆத்மாவை நாம் இழந்துள்ளோம். நான் மிகவும் வருந்துகிறேன். இந்த இழப்பை அவரது குடும்பம் தாங்கிக்கொள்ள தயவுசெய்து பிரார்த்தனை செய்யுங்கள்.ஓம் சாந்தி' என ட்வீட் செய்துள்ளார்.

 woman affected by Corona sang the song 'Love You Zindagi

மேலும், இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த டாக்டர் லாங்கே, 'கடந்த 10ஆம் தேதி இந்த இளம்பெண்ணுக்கு ஐ.சி.யூ படுக்கை கிடைத்தது, அந்த நேரத்தில் அவருக்கு நிலை சீராக இல்லை. ஆனால் அவள் மிகுந்த தன்னம்பிக்கையோடு நோயை எதிர்கொண்டாள்.

 

இனிமேல் நான் அந்த பாடலைக் கேட்கும்போதெல்லாம், அவள் தான் என் நினைவில் வருவாள். இந்த கொடுமையான துயரத்தை கடக்க அவரது குடும்பத்தினருக்கு நாம் ஆறுதலாக இருக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

 

மற்ற செய்திகள்