"லெக் ஸ்பின்னர்களை சமாளிக்கணும்!".. "இவர் இல்லாதது CSK அணிக்கு பின்னடைவுதான்!".. பிரபல வீரரின் கணிப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாயாரும் எதிர்பாராத விதமாக சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். இதனிடையே தோனிக்கு அடுத்தபடியான கேப்டன் பொறுப்பை ஏற்பவர் பற்றிய பேச்சுகளும் எழுந்தன.
இதனை அடுத்து நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங் ஐபிஎல்தொடரில் இருந்து விலகினார். இதனால் சிஎஸ்கே அணியில் பெரும் சலசலப்பு உருவானது. இந்த நிலையில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா இல்லாததால் எந்த அளவிற்கு அணிக்கு பலவீனமாக இருக்கும் என்பது பற்றிய தனது கருத்தினை முன்வைத்திருக்கிறார் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ்.
இதுபற்றி பேசிய அவர், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் பெரும்பாலும் வலது கை பேட்ஸ்மேன்களாகவே இருக்கின்றனர். இடது கை பேட்ஸ்மேன்கள் இல்லாததால், ஸ்பின் பவுலர்களை, அதிலும் குறிப்பாக லெக் ஸ்பின்னர்களை எதிர் கொள்வதில் மிகவும் சிரமத்தை சந்திக்க நேரிடும்.
லெக் ஸ்பின்னர்களை சமாளிக்க இடது கை பேட்ஸ்மேன்கள் கச்சிதமானவர்கள். இது சென்னை அணிக்கு இது பின்னடைவாக அமையலாம். இன்னும் சொல்லப்போனால், முக்கிய போட்டிகளில் கூட தோல்வி தழும் நிலைக்குக் கூட தள்ளப்படலாம். இந்த சூழலில் ரெய்னா போன்ற அதிக ரன் குவிக்கும் பேட்ஸ்மேன் அணிக்கு இல்லாதது பேட்டிங் வரிசையில் சற்றே பின்னடைவைத் தரலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்