கொரோனாவுக்கு 'எதிரான' போராட்டத்தில்... 'முன்னிலையில்' உள்ள 'தென்' மாநிலங்கள்... 'நம்பிக்கை' தரும் எண்ணிக்கை...
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனாவிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை வட மாநிலங்களை விட தென் மாநிலங்களில் அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது.
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி போன்ற மாநிலங்கள் மிக மோசமான பாதிப்பை சந்தித்து வருகின்றன. அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்புபவர்கள் எண்ணிக்கையும் ஒவ்வொரு மாநிலத்திலும் வித்தியாசமாக உள்ளது. குறிப்பாக வட மாநிலங்களை விட தென் மாநிலங்களில் குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
ஒட்டுமொத்த இந்தியாவை பொறுத்தவரை குணமடைபவர்கள் விகிதம் 19.9 சதவீதமாக உள்ளது. அதில் முதலிடத்தில் உள்ள கேரளாவில் பாதிப்பு ஏற்பட்ட 74 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அங்கு 450 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 324 பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல தமிழ்நாட்டில் 40 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். அதாவது பாதிக்கப்பட்ட 1629 பேரில் 662 பேர் குணமடைந்துள்ளனர். கர்நாடகாவில் பாதிக்கப்பட்டிருந்த 450 பேரில் 141 பேர் குணமடைந்துள்ளனர். இது 32 சதவீதமாகும்.
ஆனால் வட மாநிலங்களில் டெல்லியில் மட்டும் 32.2 சதவீதமாக உள்ள குணமடைந்தவர்கள் விகிதம் ராஜஸ்தானில் 12.17 சதவீதம், மத்திய பிரதேசத்தில் 9.92 சதவீதம், குஜராத்தில் 7.5 சதவீதம், மகாராஷ்டிரத்தில் 13.95 சதவீதம், உத்தரபிரதேசத்தில் 11.93 சதவீதம், மேற்கு வங்காளத்தில் 17.32 சதவீதம், ஆந்திராவில் 14.76 சதவீதம் என்ற நிலையில் உள்ளது.