'அதிகரிக்கும் கொரோனா'... 'செப்டம்பர் 25 ந்தேதி முதல் கடுமையான ஊரடங்கா'?... மத்திய அரசு விளக்கம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனாவை கட்டுப்படுத்த 25ந்தேதி முதல் மீண்டும் 46 நாட்கள் கடுமையான ஊரடங்கு என வெளியான தகவல்களுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

'அதிகரிக்கும் கொரோனா'... 'செப்டம்பர் 25 ந்தேதி முதல் கடுமையான ஊரடங்கா'?... மத்திய அரசு விளக்கம்!

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க செப்டம்பர் 25 முதல் மற்றொரு 46 நாட்கள் ஊரடங்கு  பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியானது. இந்த செய்திகளை நிராகரித்துள்ள மத்திய அரசு, இந்த செய்தியைப் பத்திரிகை தகவல் பணியகம் "போலி செய்தி" எச்சரிக்கையுடன் ஒரு ட்விட்டர் பக்கத்தில் மறுத்து உள்ளது. இதற்கிடையே தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.டி.எம்.ஏ) செப்டம்பர் 25 முதல் மற்றொரு ஊரடங்கை வலியுறுத்தி உள்ளதாக என்.டி.எம்.ஏவின் உத்தரவு என்று கூறும் ஸ்கிரீன் ஷாட் ஒன்று வெளியானது.

அதில் ''கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும், நாட்டில் இறப்பு விகிதத்தைக் குறைக்கவும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், திட்டக் கமிஷனுடன் இணைந்து,  இந்திய அரசைக் கேட்டு  பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்துகிறது. செப்டம்பர் 25, 2020 நள்ளிரவு முதல் தொடங்கி 46 நாட்கள் கண்டிப்பாக நாடு தழுவிய ஊரடங்கை மீண்டும் விதிக்க வேண்டும். நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகச் சங்கிலியைப் பராமரித்தல்  குறித்து இதன்மூலம் திட்டமிட என்.டி.எம்.ஏ அமைச்சகத்திற்கு முன் அறிவிப்பை வெளியிடுகிறது'' என அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த போலியான செய்தியை மறுத்து பிஐபி ட்விட்டரில் விளக்கமளித்துள்ளது. இதுபோன்ற போலியான செய்திகளைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ட்விட்டரில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மற்ற செய்திகள்