‘எனக்கு டிக்கெட் இல்லன்னா, அப்புறம் கட்சியவிட்டே போயிருவேன்’.. சொன்னபடி செஞ்ச பாஜக எம்.பி!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லி வடமேற்கு தொகுதி பாஜக எம்.பி உதித்ராஜ் சர்ச்சைகளுக்கு பேர் போனவர்.
இந்த நிலையில் சமீபத்திய மக்களவைத் தேர்தலில் தனக்கு போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்காவிட்டால், அதாவது தனக்கு சீட் கொடுக்காவிட்டால் தான் பாஜகவில் இருந்து விலகிப் போவதாக தெரிவித்துள்ளார். முன்னதாக கிழக்கு டெல்லியில் கவுதம் கம்பீரையும், புதுடெல்லியில் மீனாட்சி லேகியையும் தமது வேட்பாளராக பாஜக அறிவித்திருந்தது.
பின்னர் நீண்ட இழுபறிக்கு பின்னர், வடமேற்குத் தொகுதியில் புதிய வேட்பாளராக 2016-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து பணியாற்றிக்கொண்டிருந்த ஹான்ஸ் ராஜ் ஹான்ஸ் பெயரை வேட்புமனுத் தாக்கலின் கடைசி பொழுதில் களமிறக்கியது. இதனால் அதிருப்தி அடைந்த பாஜக எம்.பி உதித்ராஜ், தனக்கு மக்களவைத் தேர்தலில் வாய்ப்பளிக்கக் கோரி, டெல்லி பாஜக அலுவலகம் முன்பாக தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தார்.
இதுபற்றி பாஜக மூத்த தலைவர்களான அமித் ஷா உள்ளிட்டோரை சந்திக்க முயன்றும், காண முடியவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில்தான், உதித்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், தனக்கு டிக்கெட் கொடுக்காவிட்டால், தான் பாஜக பார்ட்டிக்கு குட் பை சொல்லிவிடப் போவதாகவும் தெரிவித்துள்ளார். அவரின் இந்த கலகலப்பான ட்வீட் வைரலாகி வருகிறது.
I am waiting for ticket if not given to me I will do good bye to party
— Chowkidar Dr. Udit Raj, MP (@Dr_Uditraj) April 23, 2019