'வருமா? வராதா?'.. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி! .. சீரம் நிறுவன தலைவர் அதிரடி அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்து வரும் டிசம்பர் மாதத்தின் இறுதிக்குள் 10 கோடி முறை செலுத்தும் அளவிற்கு தயாரிக்கப்பட்டு வழங்கப்படும் என்று சீரம் நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.
சீரம் நிறுவனத் தலைவர் அடார் பூனாவாலா இதுபற்றி பேசியபோது ஆஸ்ட்ரோஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து கண்டுபிடித்துள்ள தடுப்பு மருந்தை இந்தியாவில் விற்க புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டியூட் நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது.
இது பற்றி பேசிய சீரம் நிறுவன தலைவர் அடார் பூனாவாலா இந்த மருந்து இறுதி கட்ட சோதனையில் உள்ளதாகவும் டிசம்பர் மாதத்துக்குள் 10 கோடி முறை செலுத்தும் அளவுக்கு இந்த தடுப்பு மருந்து தயாரிப்பு அனைவருக்கும் வழங்கப்படும் என்றும், அதனால் இந்தியாவில் தடுப்பூசி போடும் நடவடிக்கை விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்