பயணிகள் பேருந்தை விடாது துரத்திய காட்டு யானை... நூலிழையில் தப்பித்த மக்கள்! வைரல் காட்சிகள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஒடிசா மாநிலத்தின் மயூர்பன்ஜ் என்னும் இடத்தில் யானை ஒன்றுக்கு மதம் பிடித்ததால், பேருந்தில் பயணித்த மக்களைத் துரத்தி அலறவிட்டுள்ளது. இந்த சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்டு வைரலாகியுள்ளது.

பயணிகள் பேருந்தை விடாது துரத்திய காட்டு யானை... நூலிழையில் தப்பித்த மக்கள்! வைரல் காட்சிகள்..!

ஒடிசாவின் பாலஷோர் மாவட்டத்திற்கு அந்தப் பேருந்து சென்று கொண்டிருக்கும் போது, வழியில் யானை வந்துள்ளது. என்ன நினைத்ததோ தெரியவில்லை திடீரென்று பேருந்தைத் துரத்திக் கொண்டு ஓடியுள்ளது யானை. இதை சற்றும் எதிர்பார்க்காத பேருந்து ஓட்டுனர், தன்னால் முடிந்தவரை வாகனத்தை வேகமாக ஓட்டிச் செல்ல முயன்றுள்ளார்.

wild elephant attacked a passenger bus in odisha

இருப்பினும் மதம் பிடித்த யானை, பேருந்தை தொடர்ந்து பின்னாலேயே துரத்தியுள்ளது. ஒரு கட்டத்தில் யானை, பேருந்தின் பின் பக்கத்தை நெருங்கி, தன் துதிக்கையை வைத்துத் தாக்க முற்படுகிறது.

இந்த சம்பவத்தின் போது பேருந்துக்கு உள்ளே அமர்ந்திருந்த மக்கள் பயத்தில் அலறியுள்ளனர். நெஞ்சைப் பதறவைக்கும் இந்த சம்பவத்தைப் பலர் வீடியோக்களாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அது தற்போது வைரலாகி வருகிறது.

wild elephant attacked a passenger bus in odisha

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த உள்ளூரைச் சேர்ந்த ஒருவர், ‘ஒரு கட்டத்தில் பேருந்தின் பின் பக்கத்தை நெருங்கிய யானை அதை தாக்கி உடைத்தது. எப்படியும் அது பேருந்தைக் கவிழ்த்துவிடும் என்று நாங்கள் எல்லாம் அச்சப்பட்டோம். நல்ல வேலையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. பேருந்துக்கு உள்ளே அமர்ந்திருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை’ என்று கூறுகிறார்.

ஒடிசாவில் யானைகள் இதைப் போன்று மதம் பிடித்து சாலையில் அட்டகாசம் செய்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னரும் மதம் பிடித்த யானைகள் மக்களைத் துரத்துவதும், வாகனங்களைத் துரத்துவதுமான சம்பவங்கள் நடந்துள்ளன.

ACCIDENT, ELEPHANT ATTACK, ODISHA, PASSENGER BUS, யானை, பயணிகள் பேருந்து, காட்டு யானை

மற்ற செய்திகள்