"ஒரு மாசத்துக்கு முன்னாடியே 'அவரு' இறந்துட்டாரு... ஆனா இப்போ இப்டி ஒரு 'மெசேஜ்' வந்துருக்கு... ஷாக்கான 'மனைவி'... தோண்ட தோண்ட கிடைத்த 'அதிர்ச்சி' தகவல்!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாபஞ்சாப் மாநிலம் பாட்டியாலா என்னும் பகுதியை சேர்ந்தவர் சலீம் கான். இவர் கடந்த அக்டோபர் மாதம் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு ராஜ்புரா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சலீம் கான் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 31 ஆம் தேதியன்று சலீம் கான் உயிரிழந்தார். இந்நிலையில், சலீம் கானின் மொபைல் போனை அவரது மனைவி சோனியா கான் பயன்படுத்தி வந்த நிலையில், சில தினங்களுக்கு சலீம் எண்ணிற்கு மெசேஜ் ஒன்று வந்துள்ளது.
அதனைக் கண்ட சோனியா கான் அதிர்ந்து போனார். காரணம், சலீம் கானின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டதகவும், கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என முடிவுகள் வந்துள்ளதாகவும் அந்த செய்தியில் இடம்பெற்றிருந்தது. தனது கணவர் கொரோனா தொற்று மூலம் உயிரிழந்து ஒரு மாதங்களுக்கு மேலான நிலையில், அவருக்கு நெகடிவ் என குறுஞ்செய்தி வந்துள்ளதைக் கண்டு சோனியா அதிர்ந்து போயுள்ளார்.
சலீமின் குடும்பத்தினர் ஏற்கனவே சலீம் இறப்பு சான்றிதழையும் வாங்கியுள்ளனர். இதனால் சலீம் குடும்பத்தினர் குழம்பிப் போன நிலையில், இதற்கான காரணம் என்ன என்பது குறித்து ஆராயத் தொடங்கியுள்ளனர். அப்போது மேலும் பல அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
கலோ மஜ்ரா என்னும் பகுதியிலுள்ள சுகாதார மையத்தில் இருந்து அந்த செய்தி வந்த நிலையில், சலீமின் முகவரி அதில் தவறாக இருந்துள்ளது. இதுகுறித்து விசாரித்ததில், கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகமாக நடைபெறுவதைக் காட்ட வேண்டி, பரிசோதனை மேற்கொள்ளாத நபருக்கும் 'நெகட்டிவ்' என மெசேஜ் அந்த குறிப்பிட்ட சுகாதார மையத்தில் இருந்து சென்றுள்ளது.
இது பற்றி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கிடைத்த தகவலின் படி, பாட்டியாலா பகுதியில் பலருக்கு இது போன்று சோதனை மேற்கொள்ளாமலே முடிவுகள் செய்தியாக சென்றுள்ளது தெரிய வந்தது. அது மட்டுமில்லாமல் ICMR இணையதளத்திலும் இந்த போலி முடிவு குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது.
கலோ மஜ்ரா சுகாதார மையத்திலுள்ள மருத்துவர் ஒருவர், 'அப்படி தவறான முடிவுகள் குறித்த மெசேஜ் சென்றிருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் இப்படி ஏதேனும் நிகழ்ந்திருக்குமா என ஆராய்ந்து பார்க்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
அதே போல உயர் அதிகாரி ஒருவர், இப்படி கண்டிப்பாக நிகழ்ந்திருக்காது என்றும், அந்த சுகாதார மையத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டவர்கள் தவறான முகவரி, பெயர் மற்றும் எண்ணைக் கொடுத்திருப்பதால் இந்த குழப்பம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார். அப்படி உண்மையாக, போலி பரிசோதனை எண்ணிக்கை சேர்க்கப்பட்டது தெரிய வந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்