'என்னோட கணவருக்காக இத பண்ணுவேன்' ... 'மனைவி எடுத்த சபதம்' ... நெகிழவைக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபோர் விமான சோதனையின் போது உயிரிழந்த விமானியின் மனைவி, தானும் விமானி ஆகவுள்ளது குறித்து பதிவிட்டுள்ளது பலரையும் நெகிழச்செய்துள்ளது.
மிரேஜ் 2000 போர் விமானத்தில் சோதனையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட விபத்தில் சமிர் அப்ரால் என்ற விமானி பரிதாபமாக உயிரிழந்தார். ஐந்து மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. கணவரின் எதிர்பாராத மரணம் அவரது மனைவி கரிமா அப்ராலாவை வெகுவாக பாதித்தது. கணவர் இறந்த சோகத்தில் இருந்த அவர், தற்போது தனது கணவரின் பணியை தான் தொடரவுள்ளதாக கூறியுள்ளது பலரையும் நெகிழச்செய்துள்ளது.
விமானப்படையில் சேருவதற்கான பயிற்சிகளை மேற்கொண்ட கரிமா, தற்போது அதற்கான நேர்முகத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் அடுத்த வருடம் விமானப்பட்டை அகாடமியில் சேர இருக்கிறார். பயிற்சி முடிந்ததும் விமானப்படையில் சேர்ந்து தனது கணவரின் பணியை தொடர இருக்கிறார். இதுக்குறித்து தனது சமூகவலைத்தளத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ள அவர் '' எனது கண்ணீர் இன்னும் காயவில்லை. ஒரு கோப்பை தேநீர் கொடுத்து எனது கணவரை நாட்டிற்காக வழியனுப்பினேன்'' என உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே விமானப்படையில் சேரவுள்ளது குறித்து எழுத்தாளர் ஸ்வப்னில் பாண்டேவுடன் பேசிய கரிமா'' எனது கணவர் விட்டுச்சென்ற பணியை தொடர ஆர்வமாக இருக்கிறேன். அவரது சீருடையை அணிவது எனக்கு ஊக்கத்தை அளிக்கும்'' என குறிப்பிட்டுள்ளார்.