"நான் உன் அப்பா மாதிரி... வாங்கிக்கமா!".. பாண்டிச்சேரி டூ ஒரிசா ரயில் பயணத்தில் தொலைந்த மனைவி!.. 3 நாட்கள் தனி ஒருவராக தேடி அலைந்த கணவர்.. கடைசியில் எங்கிருந்தார் தெரியுமா?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஒடிசா மாநிலம் பாலாசூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதான ரவீந்திர ஜனாவும் அவரது மனைவி 27 வயதான கபீர் ஜனா இருவரும் புதுச்சேரி மேட்டுப்பாளையம்  பகுதியில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர்.

"நான் உன் அப்பா மாதிரி... வாங்கிக்கமா!".. பாண்டிச்சேரி டூ ஒரிசா ரயில் பயணத்தில் தொலைந்த மனைவி!.. 3 நாட்கள் தனி ஒருவராக தேடி அலைந்த கணவர்.. கடைசியில் எங்கிருந்தார் தெரியுமா?

இந்நிலையில் ஒடிஷாவில், பாட்டியுடன் தங்கி படித்து வரும், இவர்களின் மகன் ஆகாஷை, ஆண்டிற்கு ஒருமுறை இவர்கள் சென்று பார்த்து வருவது வழக்கம் என்பதால், கடந்த 9ம் தேதி புதுச்சேரியில் இருந்து புவனேஸ்வர் செல்லும் ரயிலில் ரவீந்திர ஜனா, தனது மனைவி கபீரை மட்டும் மாலை 6.45 மணிக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அடுத்த நாள், ரயில் ஒடிசாவைச் சென்றடைந்ததும் கபீர் இல்லாததை அறிந்து அதிர்ந்த உறவினர்கள் ரவீந்திர ஜனாவுக்கு தகவல் தெரிவிக்க, அவரோ மனைவியைக் காணவில்லை என புதுச்சேரி ஒதியன்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன், கார் மூலம் ஒடிசாவுக்கு புறப்பட் சென்று, வழி  எங்கும் 3 நாட்களாய் ஒவ்வொரு ரயில் நிலையமாக மனைவியைத் தேடியுள்ளார்.

wife missed in a train travel, husband rescued her after 3 days

கடைசியாக ஒடிசாவின் பாலேஸ்வர் என்கிற பகுதியில் கபீரின் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டதை அறிந்தவர்கள், பாலேஸ்வர் ரயில் நிலையத்தில் சென்று விசாரித்தபோது, மயங்கிய நிலையில் இருந்த பெண் ஒருவரை அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்ததைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்தபோது கபீர் அந்த மருத்துவமனையில் சேர்த்தார். இதுகுறித்து பேசிய கபீர், ரயிலில் தன்னுடன் டிராவல் செய்த முதியவர் ஒருவர் தான் தனக்கு சாப்பிடுவதற்கு வாழைப்பழம் கொடுத்ததாகவும், ஆனாலும் அதை வாங்க மறுத்து, வேண்டாம் என்று தான் கூறியதாகவும், அவரோ “அப்பா மாதிரி இருக்கும் எங்கிட்ட இருந்து வாங்கிக்க மா” என அந்த முதியவர்,  கட்டாயப்படுத்தியதாகவும், அதனால் அந்த வாழைப்பழத்தை அவரிடம் இருந்து பெற்றுச் சாப்பிட்டதாகவும் கபீர் தெரிவித்துள்ளார்.

wife missed in a train travel, husband rescued her after 3 days

பிறகென்ன மயக்க மருந்து கலந்த அந்தப் பழத்தைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே, கபீர் மயக்கமானதாகவும், அதன் பின்னர் கபீர் அணிந்திருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் காணாமல் போய்விட்டதாகவும் கபீர் குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பாக பாலேஸ்வர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து மூன்று நாட்களாய் அலைந்து திரிந்து, மனைவியை கணவரே கண்டுபிடித்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

மற்ற செய்திகள்