Naane Varuven M Logo Top

வீட்டுக்குள்ள இருந்து வந்த துர்நாற்றம்.. போலீசில் புகார் கொடுத்த அக்கம்பக்கத்தினர்.. மனநிலை பாதிக்கப்பட்ட மனைவியின் 18 மாத போராட்டம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லியில் 18 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த கணவரின் உடலை வீட்டிலேயே பாதுகாத்து வந்திருக்கிறார் அவரது மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி. இந்த சம்பவம் உள்ளூர் மக்களை உறைய வைத்திருக்கிறது.

வீட்டுக்குள்ள இருந்து வந்த துர்நாற்றம்.. போலீசில் புகார் கொடுத்த அக்கம்பக்கத்தினர்.. மனநிலை பாதிக்கப்பட்ட மனைவியின் 18 மாத போராட்டம்..!

கான்பூர் பகுதியை சேர்ந்தவர் விமலேஷ் தீக்ஷித். வருமானவரி துறையில் பணியாற்றி வந்த இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்திருக்கிறார். ஏப்ரல் 22, 2021 ஆம் ஆண்டு தீக்ஷித் உயிரிழந்ததாக இறப்புச் சான்றிதழும் வழங்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும், மனநலம் பாதிக்கப்பட்ட தீக்ஷித்தின் மனைவி தனது கணவரின் உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். மேலும், அவர் கோமாவில் இருப்பதாகவும் அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்களிடம் அவர் தெரிவித்திருக்கிறார்.

பிரார்த்தனை

இந்நிலையில், கணவரின் உடலை வீட்டுக்குள் வைத்திருந்த அவரது மனைவி தினந்தோறும் அவரது உடலில் கங்கை தீர்த்தத்தை ஊற்றி, அவர் குணமாக பிரார்த்தனை செய்துவந்ததாக தெரிகிறது. இதனிடையே, தீக்ஷித்தின் பென்சன் பணம் குறித்த கோப்புகள் அப்படியே இருந்ததால், இதுபற்றி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, தலைமை மருத்துவ அதிகாரி (CMO) டாக்டர் அலோக் ரஞ்சன்-இடத்தில் அதிகாரிகள் இதுபற்றி கேட்டபோது, தீக்ஷித் இறந்துவிட்டதாகவும், ஆனால் அவருடைய மனைவி உடலை தர மறுப்பதாகவும் கூறியுள்ளார்.

இதுபற்றி பேசிய ரஞ்சன்,"வருமான வரித்துறையில் பணியாற்றிய விம்லேஷ் தீட்சித், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இறந்தார். ஆனால் அவர் கோமா நிலையில் இருப்பதாக நம்பியதால் அவரது குடும்பத்தினர் அவரது இறுதிச் சடங்குகளைச் செய்யத் தயங்கினர்.கான்பூரின் வருமான வரித்துறை அதிகாரிகள் என்னைத் தொடர்புகொண்டு தீக்ஷித்தின் பென்சன் கோப்புகள் நகராமல் அப்படியே இருப்பதாகவும் இதுபற்றி விசாரணை நடத்தவேண்டும் எனவும் தெரிவித்தனர்" என்றார்.

மீட்பு

இதனையடுத்து போலீஸ்காரர்கள் மற்றும் மாஜிஸ்திரேட் ஆகியோருடன் சுகாதார அதிகாரிகள் குழு வெள்ளிக்கிழமை ராவத்பூர் பகுதியில் உள்ள தீக்ஷித்தின் வீட்டை அடைந்தபோது, ​​​​அவரது குடும்ப உறுப்பினர்கள் அவர் உயிருடன் இருப்பதாகவும் கோமா நிலையில் இருப்பதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனையடுத்து அவர்களை சமாதானப்படுத்தி உடலை எடுத்துச் செய்திருக்கின்றனர் அதிகாரிகள். தீக்ஷித்தின் உடல் மோசமான முறையில் அழுகிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த கணவர் கோமாவில் இருப்பதாக நம்பி 18 மாதங்கள் அவருடைய உடலுடன் மனைவி வாழ்ந்துவந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது..

DELHI, HUSBAND, WIFE

மற்ற செய்திகள்