உங்க மாச வருமானம் என்ன..? சொல்ல மறுத்த கணவன்.. மனைவி எடுத்த ‘அதிரடி’ முடிவு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கணவரின் வருமான விவரத்தை தெரிந்துகொள்ள மனைவிக்கு உரிமை உள்ளது என மத்திய தகவல்ஆணையம் தெரிவித்துள்ளது.

உங்க மாச வருமானம் என்ன..? சொல்ல மறுத்த கணவன்.. மனைவி எடுத்த ‘அதிரடி’ முடிவு..!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் ரஹமத் பானு. இவரது கணவர் தனது வருமான விவரத்தை பானுவிடம் தெரிவிக்க மறுத்துள்ளார். இதனை அடுத்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTI) கீழ் தனது கணவரின் வருமான விவரத்தை தெரிவிக்க வேண்டும் என வருமான வரித்துறையிடம் அவர் கேட்டுள்ளார். ஆனால் மூன்றாம் நபரிடம் இதுபோன்ற விவரத்தை தெரிவிக்க முடியாது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதை எதிர்த்து ரஹமத் பானு மத்திய தகவல் ஆணையத்தில் (CIC) மேல்முறையீடு செய்துள்ளார்.

Wife has right to know husband’s income, says CIC

இந்த மனுவை பரிசீலித்த மத்திய தகவல் ஆணையம், RTI சட்டத்தின் கீழ் கணவரின் மொத்த வருமான விவரத்தை தெரிந்துகொள்ள மனைவிக்கு முழு உரிமை உள்ளது என தெரிவித்துள்ளது. RTI சட்டத்தின் கீழ் இதுபோன்ற தகவலை மூன்றாம் நபர் கோர முடியாது என்ற வாதத்தை மத்திய தகவல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது. மேலும் மனுதாரர் கோரிய விவரத்தை இந்த உத்தரவு கிடைத்த 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என ஜோத்பூர் வருமான வரித்துறைக்கு மத்திய தகவல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டது.

மற்ற செய்திகள்