RRR Others USA

“இதுவும் பாலியல் வன்கொடுமைதான்”.. கணவர் மீது மனைவி கொடுத்த புகார்.. நீதிமன்றம் பரபரப்பு கருத்து..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கணவனுக்கு எதிராக மனைவி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளது.

“இதுவும் பாலியல் வன்கொடுமைதான்”.. கணவர் மீது மனைவி கொடுத்த புகார்.. நீதிமன்றம் பரபரப்பு கருத்து..!

கர்நாடக மாநிலத்தில் தனது விருப்பம் இல்லாமல் கணவன் பாலியல் வல்லுறவு கொண்டதாக மனைவி புகார் அளித்திருந்தார். இதனை அடுத்து கணவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனது மனைவி கொடுத்த பாலியல் வன்கொடுமை புகாரை நீக்க வேண்டும் என கணவர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எம். நாகபிரசன்னா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘மனைவியின் விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி அவருடன் உடலுறவு கொள்வதும் ஒரு வகையான பாலியல் வன்கொடுமைதான். கணவன் தனது மனைவி மீது நடத்தும் இத்தகைய பாலியல் வன்கொடுமையால் மனைவிக்கு மனதளவில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். அது அப்பெண்ணின் மீது உளவியல் மற்றும் உடலியல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதனால் கணவர் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை நீக்க உத்தரவிட முடியாது’ என நீதிபதி கூறினார்.

Wife files case against husband in Karnataka HC

தொடர்ந்து, ‘ஆண் என்பவன் ஆண்தான், ஒரு செயல் என்பது செயல்தான். பாலியல் வன்கொடுமை என்பது பாலியல் வன்கொடுமைதான். அதை கணவர் என்ற பெயரில் ஒரு ஆண், மனைவி மீது நடத்தினாலும் அது குற்றம்தான். திருமணம் செய்து கொண்டதாலேயே கணவருக்கு எந்த வித சிறப்பு தனிப்பட்ட சலுகைகளும் தர முடியாது. ஒரு கணவர் தனது மனைவியை தனக்கு சொந்தமாகவே பார்க்கிறார்.

கணவர்கள் மனைவிகளை ஆள்பவர்களாகவே பழங்கால மரபுகளும் கலாச்சாரங்களும் பார்க்கின்றன. அரசியலமைப்பு சட்டத்தின் படி அனைத்து மனிதர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும், அது ஒரு ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் அல்லது யாராக இருந்தாலும் சரி’ என நீதிபதி தெரிவித்துள்ளார்.

KARNATAKAHC, WIFE, HUSBAND

மற்ற செய்திகள்