இந்தியாவோட 'இந்த' பகுதிகளுக்கு... 'லாக்டவுன்' ரொம்ப நாள் நீட்டிக்கணும் இல்லன்னா... 'எச்சரிக்கும்' உலக சுகாதார அமைப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியா முழுவதும் தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு மே மாதம் 17 - ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மும்பை, சென்னை, டெல்லி போன்ற நகரங்களில் எதிர்பார்த்ததை விட அதிக காலத்திற்கு சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டியிருக்கும் என உலக சுகாதார அமைப்பின் சிறப்பு பிரதிநிதி டேவிட் நபரோ தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் மூலம் சுமார் 74 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா மூலம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,400 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து கொரோனா வைரசுக்கான உலக சுகாதார அமைப்பின் சிறப்பு பிரதிநிதியான டேவிட் நபரோ கூறுகையில், 'இந்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கை அறிவித்துள்ளது மிகவும் தைரியமான முடிவு. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மும்பை, சென்னை, டெல்லி போன்ற நகரங்களில் இன்னும் அதிக காலத்திற்கு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியிருக்கும். இல்லையென்றால் அதிக உயிரிழப்புகளை இந்தியா சந்திக்க வேண்டி வரும்' என எச்சரித்தார்.
மேலும், 'இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதில் 50 முதல் 70 சதவீதம் பேருக்கு கொரோனா அறிகுறியே இல்லை என அரசு தரப்பில் தகவல்கள் கூறுகின்றன. வலுவான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் நபருக்கு கொரோனா அறிகுறியே இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களால் மற்றவர்களுக்கு நோய் பரவும் அபாயமுள்ளது என நிபுணர்கள் நம்புகின்றனர்' என கூறினார்.