உலக அளவில் ஒமைக்ரான் பரவல் மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது பல நாடுகளுக்கும் பரவி வருகிறது. கொரோனா தடுப்பூசி அவசியம் குறித்து பலரும் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.
இந்த வகையில் ஒமைக்ரான் வைரஸிடம் இருந்து நம்மை பாதுகாக்க சமுக இடைவெளி, மாஸ்க் அணிதல் ஆகியவற்றை மீண்டும் மீண்டும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலுக்குப் பின்னர் மாஸ்க் அணிவது நமது அன்றாட ஆடை போல் ஆகிவிட்டது. இதனால், மாஸ்க் அணிவதன் முக்கியத்துவம் குறித்து நாம் இன்னமும் மெத்தனம் காட்டுதல் கூடாது.
இன்று பலரும் மாஸ்க் அணிவதில் ஃபேஷனை புகுத்தி பாதுகாப்பை கோட்டைவிட்டு வருவதாக மருத்துவர்கள் கண்டித்து வருகின்றனர். பலரும் ஆடைக்கு மேட்ச் ஆகும் முக மாஸ்க், கலர், ட்ரெண்ட், தனித்துவம் இதில் கவனம் செலுத்துகிறார்களே தவித அது பாதுகாப்பானதா என்று யோசிக்க மறந்து விடுவதாக மருத்துவ நிபுணர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இன்று சந்தையில் கிடைக்கும் விலை உயர்வான, அலங்கார, வண்ண வண்ண துணி மாஸ்க்குகள் நிச்சயமாக சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவது கிடையாது. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வின் அடிப்படையில் சில தரம் ஆன துணி மாஸ்க்குகள் விற்பனையில் இருக்கத் தான் செய்கின்றன. ஆனால், N95 மாஸ்க்குகள் மிகுந்த பாதுகாப்பைத் தருகின்றன என ஆக்ஸ்ஃபோர்டு மருத்துவ பேராசிரியர் டிரிஸ் க்ரீன்ஹாக் கூறுகிறார்.
N95 மாஸ்க்குகள் 95 சதவிகிதம் காற்றில் உள்ள தேவையில்லாத துகள்கள், கிருமிகளை கட்டுப்படுத்தும் திறன் கொண்டவையாக இருக்கின்றனவாம். துணி மாஸ்க்கை விட 3 அடுக்குகள் கொண்ட சர்ஜிகல் மாஸ்க் மிக மிக பாதுகாப்பானதாகக் கூறப்படுகிறது. நீங்கள் உள் அரங்கங்களில் இல்லாமல் வெளிப்புறங்களில் இருந்தாலும் மாஸ்க் அணிவதை பொது இடங்களில் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இந்த நேரத்தின் நாம் ஃபேஷன் மீது கவனம் செலுத்தாமல் ஒமைக்ரானுக்கு எதிரான பாதுகாப்பை உறுதி செய்வோம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
மற்ற செய்திகள்