‘எப்பதான் கெடைக்கும்?’.. ‘என்ன விலை?’.. கொரோனா தடுப்பூசி குறித்து இந்தியாவின் சீரம் நிறுவன CEO தெரிவித்த ‘முக்கிய’ தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆக்ஸ்போர்டுடன் இணைந்து சீரம் நிறுவனம் தயாரிக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி டிசம்பர் மாத தொடக்கத்தில் தயாராகும் என்று  சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார். அத்துடன் 2021 ஆம் ஆண்டின் இரண்டாவது அல்லது மூன்றாம் காலாண்டில் 10 கோடி டோஸின் முதல் தொகுதி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

‘எப்பதான் கெடைக்கும்?’.. ‘என்ன விலை?’.. கொரோனா தடுப்பூசி குறித்து இந்தியாவின் சீரம் நிறுவன CEO தெரிவித்த ‘முக்கிய’ தகவல்!

உலகம் முழுவதும் 4.39 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.97 கோடி மக்கள் குணமடைந்துள்ளனர்.  1.29 கோடி பேர் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். 11.66 லட்சத்திற்கும் அதிகமானோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 80 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இந்த நிலையில் தடுப்பூசி குறித்து பேட்டி அளித்த சீரம் நிறுவன தலைமை நிர்வாகி ஆதார் பூனவல்லா, “டிசம்பர் மாதத்திற்குள் முடிவடைய வேண்டிய எங்கள் சோதனைகளை, ஜனவரி மாதத்தில் இந்தியாவில் தொடங்கலாம் என்பது எங்கள் எண்ணம், இங்கிலாந்து தடுப்பூசி சோதனைகளும் நிறைவடையும் நிலையில் உள்ளது.  அவர்களின் ஆய்வு பாதுகாப்பானது என்று நம்பிக்கை இருந்தால், 2-3 வாரங்களுக்குப் பிறகு,   இந்திய அரசின் விருப்பத்துக்கு ஏற்ப, அவசரகால உரிமம் பெற்று, இந்திய கட்டுப்பாட்டாளருக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆனால் அந்த மதிப்பாய்வு 2, 3வாரங்கள் எடுக்கும்.  ஆக, டிசம்பர் மாதத்திற்குள் ஒரு தடுப்பூசி வரலாம், எனினும் இதெல்லாம் திட்டமிட்டபடி நடப்பது குறித்து சுகாதார அமைச்சக அதிகாரிகள்தான் முடிவு செய்ய வேண்டும். எனினும் ஒருவேளை தடுப்பூசி, வந்தால் அது 28 நாட்கள் இடைவெளியில் பயன்படுத்தப்படும் வகையில், இரண்டு டோஸ் தடுப்பூசியாக இருக்கும். அரசுடன் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருப்பதால், அதன் விலை குறித்து கருத்து இல்லை. இரண்டு நூறுகள் அளவு இருக்கலாம். ஆனால் சீரம் நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசி சனோஃபி-ஜி.எஸ்.கே மற்றும் மாடர்னா தடுப்பூசிகளைக் காட்டிலும் மிகவும் மலிவானதாக இருக்கும் என்றுதான் எதிர்பார்க்கிறேன்” என்று அவர் கூறினார்.

மற்ற செய்திகள்