கருப்பு பூஞ்சை தொற்றுக்கான அறிகுறிகள் என்ன?.. யாரை எளிதாக தாக்கும்..? எய்ம்ஸ் மருத்துவர்கள் விளக்கம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் தொற்று பரவி வரும் நிலையில், அதன் அறிகுறிகள் குறித்து மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களை மியூகோர்மைகோசிஸ் (Mucormycosis) என்ற கருப்பு பூஞ்சை (Black fungus) நோய் தாக்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகாவை தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் இந்த நோய் தொற்று பரவ ஆரம்பித்துள்ளது.
கருப்பு பூஞ்சை நோய்க்கான அறிகுறிகள்:
1. மூக்கடைப்பு
2. காய்ச்சல், கடுமையான தலைவலி
3. முகத்தில் வீக்கம், வலி
4. பார்வை குறைபாடு, பார்வை தெளிவாக இல்லாமல் இரட்டையாக தெரிவது, கண்கள் சிவந்து காணப்படுதல்
5. மூக்கில் இருந்து ரத்தம் கலந்த நீர் வடிதல்
6. ரத்த வாந்தி
7. வாய், அதன் சுற்றியுள்ள பகுதிகள் கருப்பாக மாறுதல், போன்ற இந்த பூஞ்சை தொற்றுக்கான அறிகுறிகளாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த கருப்பு பூஞ்சை நோய் தொற்று, சர்க்கரை நோயாளிகள், ஸ்டீராய்டுகளை அதிகமாக எடுத்துக்கொள்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை எளிதாக தாக்குவதாக எய்ம்ஸ் மருத்துவ குழு எச்சரித்துள்ளது.
இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
1. சர்க்கரை நோயாளிகள், ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க வேண்டும்
2. உடற்பயிற்சி செய்ய வேண்டும்
3. ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும்
4. வெளியே செல்ல நேர்ந்தால் முகத்தில் முடிந்த அளவுக்கு இரட்டை முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்
இந்த கருப்பு பூஞ்சை நோய் தொற்றை ‘அறிவிக்கப்பட வேண்டிய நோய்’ என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். தனியார் மருத்துவமனைகளில் இந்த நோய் தொற்று கண்டறியப்பட்டால் உடனே அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மற்ற செய்திகள்