Video : "இந்திய பிரதமர் மோடிக்கு ரொம்ப பெரிய நன்றி..." நெகிழ்ச்சியுடன் பேசிய 'வெஸ்ட் இண்டீஸ்' கிரிக்கெட் 'வீரர்'!!
முகப்பு > செய்திகள் > இந்தியாவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் ஆந்த்ரே ரசல் (Andre Russell), இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு பரவ ஆரம்பித்த கொரோனா தொற்று, உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக ஆட்டிப் படைத்தது. இதனையடுத்து, இந்த கொடிய தொற்றைக் கட்டுப்படுத்த, பல உலக நாடுகள் இதற்கான தடுப்பூசியை உருவாக்கினார். தற்போது பல நாடுகளில், மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்திய அரசு, ஜமைக்கா நாட்டிற்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கியது. இது தொடர்பாக, இந்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் (Narendra Modi) நன்றியை தெரிவித்து பேசியுள்ளார் கிரிக்கெட் வீரர் ஆந்த்ரே ரசல். அந்த வீடியோவில், 'பிரதமர் மோடிக்கும், இந்திய தூதருக்கும் பெரிய பெரிய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். தடுப்பூசிகள் ஜமைக்கா வந்துள்ளன. நாங்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளோம்.
'I want to say a big thank you to PM @narendramodi & @hcikingston. The #COVID19 Vaccines are here & we are excited.' @PMOIndia
'#India & #Jamaica - We are more than close, we are now brothers'.
WI Cricketer Andre Russell praises #VaccineMaitri @Russell12A @DrSJaishankar pic.twitter.com/LhGi5OQeED
— India in Jamaica (@hcikingston) March 16, 2021
உலகம் இயல்பு நிலைக்கு திரும்புவதை நாங்கள் விரும்புகிறோம். ஜமைக்கா மக்களும் இதனை வரவேற்றுள்ளனர். நம் இரு நாடுகளும், நெருக்கத்துக்கு அதிகமான உறவு கொண்டுள்ளதையே இது காட்டுகிறது. இந்தியாவும், ஜமைக்காவும் இப்போது சகோதரர்கள்' என மகிழ்ச்சியுடன் ரசல் பேசியுள்ளார்.
ஆஸ்ட்ரா ஜெனகாவின் கோவிஷீல்ட் வாக்சினின் சுமார் 50 ஆயிரம் டோஸ்களை, ஜமைக்காவுக்கு இந்தியா அனுப்பி வைத்திருந்தது. இதற்கு ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹால்னெஸ் (Andrew Holness) நன்றி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்