கல்யாணத்துக்கு வந்து அலைய வேணாம்.. ஸ்ட்ரைட்டா கூகுள் மீட் வாங்க.. அசத்தும் ஜோடி! ஆனா சாப்பாடு எப்படி? அதான் ஹைலைட்டே!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கடந்த 2020 ஆம் ஆண்டு, சீனாவில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக அச்சுறுத்தியது.

கல்யாணத்துக்கு வந்து அலைய வேணாம்.. ஸ்ட்ரைட்டா கூகுள் மீட் வாங்க.. அசத்தும் ஜோடி! ஆனா சாப்பாடு எப்படி? அதான் ஹைலைட்டே!

இதன் காரணமாக, அனைத்து நாடுகளும், கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்த வேண்டி, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால், பல மாதங்களுக்கு மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கிப் போயினர்.

திருமணம் உள்ளிட்ட பல விஷேச நிகழ்ச்சிகளுக்கு, குறைந்த எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை, மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கூகுள் மீட்டில் திருமணம்

இந்நிலையில், கொரோனா தொற்றினைக் கருத்தில் கொண்டு, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புதிதாக திருமணமாகவுள்ள ஜோடி, அசத்தல் முடிவு ஒன்றை எடுத்துள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக, தங்களது திருமணத்தை வரும் 24 ஆம் தேதி, கூகுள் மீட் மூலம் நடத்த முடிவு செய்துள்ளது.

இதன் மூலம், சுமார் 450 உறவினர்கள் கலந்து கொள்ளவும் ஏற்பாடு செய்துள்ளனர். சுமார் 200 பேர் வரை தான் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டுமென மேற்கு வங்க அரசும் அறிவித்துள்ளது.

தள்ளிப் போன திருமணம்

இதுகுறித்து மணமகன் சந்தீப் சர்க்கார் பேசுகையில், 'கடந்த ஆண்டே எங்களின் திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால், தொற்று பரவல் காரணமாக தள்ளிப் போனது. அது மட்டுமில்லாமல், கடந்த சில தினங்களுக்கு முன், நானும் கொரோனா தொற்றின் மூலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தேன்.

விருப்பமில்லை

இதனால், திருமணம் என்ற பெயரில் எனது உறவினர்களை அழைத்து, அவர்களின் நிலைமையைக் கடினமாக்க நாங்கள் விரும்பவில்லை. இதனால், எங்களின் உறவினர்களை ஆன்லைன் மூலம், ஒன்றிணைக்க முடிவு செய்தோம். அது மட்டுமில்லாமல், அவர்கள் அனைவருக்கும் சோமாடோ மூலம், உணவு டெலிவரி வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்' என தெரிவித்துள்ளார்.

வரவேற்பு

சோமாடோ மூலம் 450 பேருக்கு உணவு டெலிவரி செய்யும் ஆலோசனையை, அந்நிறுவனத்தின் சார்பாக பாராட்டவும், இந்த சிறப்பான் திட்டத்தை வரவேற்கவும் செய்துள்ளனர். அதே போல, அனைவருக்கும் உணவினை வழங்குவதற்கு, சிறப்பான கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

உறவினர்களின் பாதுகாப்பு

தொடர்ந்து, தனது திருமணம் குறித்து மணப்பெண் அதிதி பேசுகையில், 'இத்தகைய சூழ்நிலையில், நேரில் வந்து, திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள, நிச்சயம் பல பேர் தயங்குவார்கள். இதனால், நாங்கள் போட்டுள்ள திட்டம் தான் சிறந்தது. எங்களின் விருந்தினர்களின் உயிருக்கும் அது பாதுகாப்பாக இருக்கும்' என தெரிவித்துள்ளார்.

நம்பிக்கை அளிக்கும் ஜோடி

இனி வரும் காலங்களில், விர்சுவல் திருமணம் (Virtual Marriage), புதுமையான ஒன்றாக மாறும் என்றும், எங்களின் வழியை அதிகம் பேர் பின்பற்றுவார்கள் என்றும் சந்தீப் - அதிதி ஜோடி நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

MARRIAGE, GOOGLE MEET, VIRTUAL MARRIAGE, ZOMATO, கூகுள் மீட், கல்யாணம்

மற்ற செய்திகள்