"கயிறு கட்டி தரதரவென இழுத்துச் செல்லப்படும் சடலங்கள்!".. "மனிதகுலத்திற்கே இழிவான செயல்!".. கொதித்த கவர்னர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை குப்பைத் தொட்டியில் வீசியது போலவே, மேற்குவங்கத்திலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
மேற்குவங்கத்தில், தெற்கு கொல்கத்தாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துப்போன 13 சடலங்கள் தகனத்துக்காக, கயிறு கட்டி தரதரவென்று இழுத்துச் சென்று அமரர் வாகனத்தில் ஏற்றப்பட்டது. அப்போது துர்நாற்றம் வீசியதை அடுத்து உள்ளூர்வாசிகள் தகன வாயிலுக்கு பூட்டுப் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனை ஒருவர் வீடியோ எடுத்ததை அடுத்து இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு அதிகாரிகளுக்கு மேற்க வங்க கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பற்றி பேசிய கவர்னர் ஜகதீப் தங்கர், “இறந்து போன மனித சடலங்களை இப்படி இழிவாக நடத்தியது மனிகுலத்தை வெட்கப்படச் செய்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு விளக்கம் அளித்த மேற்குவங்க சுகாதாரத் துறை, அவை கொரோனா நோயாளிகளின் சடலம் இல்லை என்றும், அவை உரிமை கோரப்படாத நோயாளிகளின் உடல்கள் என்றும் தெரிவித்துள்ளது. இதுபோன்ற போலிச் செய்திகளை பரப்புவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கொல்கத்தா காவல்துற ட்வீட் செய்துள்ளது.
மற்ற செய்திகள்