பாஜக வேட்பாளரிடம் ‘மம்தா பானர்ஜி’ தோல்வி.. தேர்தல் ஆணையம் ‘அதிரடி’ அறிவிப்பு.. மேற்கு வங்கத்தில் பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், மற்றும் அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக 156 தொகுகளிலும், அதிமுக 78 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகின்றன.
அதேபோல் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவும் இடையே நேரடி மோதல் இருந்தது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் பாஜகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் ஒரளவு சமமான எண்ணிக்கையில் இருந்தன. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த சுற்றுகளில் திரிணாமுல் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை பெறத் தொடங்கியது.
ஆனாலும் மம்தா பானர்ஜி போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி தொடக்கத்தில் முன்னிலையில் இருந்தார். அடுத்தடுத்த சுற்றுகளில் இருவரும் மாறிமாறி முன்னிலை வகித்தனர். மிக நெருக்கமாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மம்தா பானர்ஜி 1,200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
ஆனால், அது முன்னிலை நிலவரம்தான் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நடந்த வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 218 தொகுதிகளிலும் பாஜக 71 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
மற்ற செய்திகள்