"இது நமது கலாச்சாரமே இல்லை..." 'காரணமானவர்களை சும்மா விடமாட்டோம்...' 'மத்திய அரசு' மிக தீவிரமான ஒன்றாக இதை 'கையில் எடுத்துள்ளது...'

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உணவில் வெடிபொருட்களை கலந்து கொடுப்பது நமது கலாச்சாரமே இல்லை என்றும், கொடூரமாக யானையை கொலை செய்த நபர்களை சும்மா விட மாட்டோம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

"இது நமது கலாச்சாரமே இல்லை..." 'காரணமானவர்களை சும்மா விடமாட்டோம்...' 'மத்திய அரசு' மிக தீவிரமான ஒன்றாக இதை 'கையில் எடுத்துள்ளது...'

கேரள மாநிலத்தில் தனது பசியை போக்கிக் கொள்ள வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்ட அன்னாசிப் பழத்தை சாப்பிட்ட யானை பரிதாபமாக உயிரிழந்தது. அதாவது உண்ணும் போது வெடிபொருட்கள் வெடித்து யானையின் வாய் புண்ணாகி அதன்பிறகு உண்ண முடியாமல் பசியால் துடிதுடித்துள்ளது. அதன்பிறகு ஆற்று நீரில் இறங்கி அப்படியே உயிரிழந்துள்ளது. இதன் பிரேத பரிசோதனையில் வயிற்றில் ஒரு குட்டி இருந்தது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி மோகன் கிருஷ்ணன் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதன் மூலம் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதுதொடர்பாக ட்விட் செய்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "கேரள மாநிலம் மலப்புரத்தில் யானை கொல்லப்பட்ட விவகாரத்தை மத்திய அரசு மிகவும் தீவிரமான ஒன்றாக கையில் எடுத்துள்ளது. இந்த விஷயத்தில் உரிய விசாரணைக்கு உத்தரவிடப்படும்.

 

சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். உணவில் வெடிபொருட்களை கலந்து கொடுப்பது இந்திய கலாச்சாரமே இல்லை" என்று கொந்தளித்துள்ளார்.

மற்ற செய்திகள்