“புத்தாண்டு பரிசாக... இந்திய மக்களுக்கு தடுப்பூசி தொடர்பாக” - அரசு தரப்பிலிருந்து வெளியான ‘நம்பிக்கை’ தரும் 'அறிவிப்பு'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் விரைவில் வரக்கூடும் என்று  அதிரடியாக குறிப்பிட்டுள்ளது.

“புத்தாண்டு பரிசாக... இந்திய மக்களுக்கு தடுப்பூசி தொடர்பாக” - அரசு தரப்பிலிருந்து வெளியான ‘நம்பிக்கை’ தரும் 'அறிவிப்பு'!

வெபினார் ஒன்றில், மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் Dr VG Somani, “இந்த புத்தாண்டில் நமது கையில் அநேகமாக ஏதேனும் கொரோனா தடுப்பு மருந்து இருக்கலாம் என்பதைத் தான் நான் இப்போதைக்கு குறிப்பாக சொல்ல முடியும்.” என்று தெரிவித்துள்ளார்.

we will have something in hand neay year2021 Covid19 Vaccine India

கொரோனா அவசரகால பயன்பாட்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்த நிபுணர் குழுவின் முக்கியமான கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், விரைவில் மக்களுக்கு இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசி கிடைக்கும் என பிரதமர் கூறியதாக தகவல்கள் ஒருபுறம் வெளியாக, இன்னொருபுறம், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, பாரத் பயோடெக் மற்றும் ஃபைசர் தயாரிக்கும் தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டு ஒப்புதலுக்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணியை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழு கையில் எடுத்துள்ளது.

இவற்றுக்கு DCGI eனப்படும் Drug control general of India இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம் ஒப்புதல் அளிப்பதற்கான பணிகள் விரைவில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

we will have something in hand neay year2021 Covid19 Vaccine India

இது தொடர்பாக Serum Institute நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) கூட்டாக உருவாக்கும் 'கோவிஷீல்ட்' (Covishield)தடுப்பூசி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) உடன் சேர்ந்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் 'கோவாக்சின்(Covaxin)' ஆகியவை பற்றி காணொளி விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. ஃபைசர் நிறுவனத்தின் தரவை வழங்க அதிக நேரம் கோரப்பட்டுள்ளது.

we will have something in hand neay year2021 Covid19 Vaccine India

ALSO READ: “தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசி... வெகு விரைவில் துவங்க இருக்கிறது தமிழக அரசு..!” - ஊசி போடும் ‘தேதியுடன்’ விவரங்களை அறிவித்த சுகாதாரத்துறை!!

சீரம் நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை 2 முதல் 8 டிகிரி சென்டிகிரேடில் சேமிக்க முடியும். எனவே சேமித்து வைப்பது மிக எளிதானது. மைனஸ் 70 டிகிரி சென்டிகிரேடில் உள்ள பைசர் தடுப்பூசிக்கு தேவைப்படுவதை விட சாதாரண குளிர்சாதன பெட்டியைப் பயன்படுத்தி இதனை சேமிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்