காலையில 'கண்ணு' முழிக்கிறப்போ அவர் ஒரு 'டிரைவர்' மட்டும் தான்...! 'ஆனா மதியம் கோடீஸ்வரர் ஆயிட்டார்...' - வெறும் 270 ரூபாய்ல 'எப்படி' இது சாத்தியமாச்சு...?
முகப்பு > செய்திகள் > இந்தியாமேற்கு வங்காளத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் ஒரே ராத்திரியில் கோடீஸ்வரராக மாறியது அனைவரிடையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வறுமை நிலையில் இருந்துக்கொண்டு ஆம்புலன்ஸ் ஓட்டி வந்த அவர் அதிர்ஷ்டத்தினால் அவரின் வாழ்க்கை முறையே மாறியுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தின் கிழக்கு பர்தமான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷேக் ஹீரா. இவர் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் ஆம்பிலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். ஒரு நாள் காலை கண்விழித்த பிறகு நேராக கடைக்கு சென்று 270 ரூபாய் மதிப்பிலான லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார்.
அன்றைக்கு மதியம் நடந்த லாட்டரி சீட்டு குலுக்கல் முடிவில் ஷேக் ஹீரா வாங்கிய அந்த லாட்டரி டிக்கெட்டுக்கு பரிசு விழுந்துள்ளது. அன்றைய தினம் மதியமே அவர் கோடீஸ்வரர் ஆகிவிட்டார். இதன் மூலம் ஒருசில மணி நேரங்களிலேயே ஆம்புலன்ஸ் டிரைவராக இருந்த ஷேக் கோடீஸ்வரராக மாறியுள்ளார். அந்த லாட்டரி டிக்கெட் மூலமாக ஷேக்கிற்கு ஒரு கோடி ரூபாய் பரிசு அடித்துள்ளது.
அன்றாட செலவுக்கு கஷ்டப்படுகிற சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஷேக் தனக்கு அடித்த ஜாக்பாட் குறித்து பேசும்போது, “ஒரு நாள் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் நான் அவ்வப்போது லாட்டரி டிக்கெட்களை வாங்கி வந்தேன். இத்தனை நாட்கள் கழித்து எனக்கு இந்த புதிய வாழ்க்கை அதிர்ஷ்டம் மூலம் நடந்துள்ளது" என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இந்த பரிசுப் பணத்தை வைத்து என்ன செயய போகிறீர்கள் என கேட்டதற்கு, 'என்னுடைய பணப்பிரச்னைகள் யாவும் முடிவுக்கு வர உள்ளது. என் அன்பு அம்மாவின் மருத்துவ செலவுக்கு பணம் இல்லையே என தவித்துக் கொண்டிருந்தேன், தற்போது இந்த பணத்தின் மூலம் என் அம்மாவின் சிகிச்சையை தடையின்றி தொடர முடியும். நாங்கள் வசிப்பதற்கு ஒரு சொந்தமாக ஒரு வீடு கட்ட உள்ளேன். இதைத் தவிர இப்போது எனக்கு எந்த திட்டமும் கிடையாது' என கூறியுள்ளார்
இந்த நிலையில், போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற ஷேக், தனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படலாம், எனது லாட்டரி டிக்கெட்டை யாராவது பறித்துக் கொள்வதற்கு வாய்ப்புள்ளது என பாதுகாப்பு கேட்டுள்ளார். அதன்படி அவரின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பரிசுத் தொகை விழுந்த டிக்கெட் வாங்கப்பட்ட கடைக்காரரான ஷேக் ஹனீஃப் இதுகுறித்து கூறும்போது, 'என்னுடைய கடையில் இருந்து சிறிய அளவிலான பரிசுகள் இதற்குமுன் சிலருக்கு கிடைத்துள்ளது. ஆனால் இவ்வளவு பெரிய பரிசு கிடைத்திருப்பது முதன்முறை. அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்' என கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்