"லைக்ஸ்-அ விட லைஃப் முக்கியம்.. இப்படியெல்லாம் பண்ணாதீங்க".. IPS அதிகாரி பகிர்ந்த திக்..திக்.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான தீபான்ஷு காப்ரா ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ, பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

"லைக்ஸ்-அ விட லைஃப் முக்கியம்.. இப்படியெல்லாம் பண்ணாதீங்க".. IPS அதிகாரி பகிர்ந்த திக்..திக்.. வீடியோ..!

Also Read | "என் Friend எந்திரிக்கவே இல்ல.. ரூம்ல பாம்பு இருக்கு..சீக்கிரம் வாங்க"..போலீசுக்கு போன் செஞ்ச நபர்.. உண்மையை போட்டு உடைத்த டாக்டர்கள்..!

ஓமான் நாட்டில் உள்ளது சலா அல்-முக்சைல்ன் கடற்கரை. கூரான பாறைகள் சூழ்ந்த இந்த பகுதியில் மக்கள் குறிப்பிட்ட தூரத்துக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். கடல் அலை ஆக்ரோஷமாக இருக்கும் என்பதால் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், ராட்சத அலையில் புகைப்படம் எடுக்க சென்ற சிலர் இந்த அலையினால் அடித்துச் செல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது. விசாரணையில் காணாமல் போன குடும்பத்தினர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்திருக்கிறது.

அதிர்ச்சி

மகாராஷ்டிரா மாநிலத்தினை சேர்ந்த குடும்பம் ஒன்று சில தினங்களுக்கு முன்னர் ஓமானில் உள்ள சலா அல்-முக்சைல்ன் கடற்கரைக்கு சென்றிருக்கிறது. அப்போது ஆக்ரோஷமாக எழுந்த கடல் அலையில் சிக்கி 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும், காணாமல் போன 5 பேரை தேடும் பணிகள் நடைபெறு வருவதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 3 பேரும் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சமூக வலை தளங்களில் அதிகமானோரால் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோவில் ராட்சத கடல் அலைக்கு அருகில் நின்ற மக்கள், அலையின் வேகத்தினால் தாக்கப்பட்டு கீழே விழுகின்றனர். மேலும், சிலர் அலையில் அடித்துச் செல்லப்படுவதும் அந்த வீடியோவில் பதிவாகியிருக்கிறது.

waves sweep away 5 persons at Oman beach Video

லைக்ஸ்-அ விட லைஃப் முக்கியம்

சத்தீஸ்கர் மாநிலத்தின் மக்கள் தொடர்பு மற்றும் போக்குவரத்துத்துறை கமிஷனராக இருக்கிறார் திபான்ஷு காப்ரா. இவர் புதன்கிழமை (நேற்று) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இந்த வீடியோ தற்போது பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்த பதிவில் அவர்,"லைக்குகளை விட உங்களது வாழ்க்கை மிக முக்கியமானது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவை இதுவரையில் 2 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். மேலும், சமூக வலை தளங்களில் இந்த வீடியோ பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

 

Also Read | தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி.. ஹாஸ்பிடல் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு..!

 

OMAN BEACH VIDEO, IPS OFFICER, WAVES

மற்ற செய்திகள்