'73 கோடி' ரூபா 'தண்ணிய' திருடிட்டாங்க..போலீஸ் 'கேஸ்' கொடுத்த மனிதர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உலகம் முழுவதும் தண்ணீர் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவருகிறது. போதிய தண்ணீர் இல்லாததால் கோடைகாலத்தில் நமது சென்னை தவித்த தவிப்பை இந்த உலகமே பார்த்து பரிதாபம் கொண்டது. இந்தநிலையில் தனது கிணறுகளில் இருந்து தண்ணீரை திருடி விட்டார்கள் என, மும்பையை சேர்ந்த ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

'73 கோடி' ரூபா 'தண்ணிய' திருடிட்டாங்க..போலீஸ் 'கேஸ்' கொடுத்த மனிதர்!

தெற்கு மும்பையை சேர்ந்த சுரேஷ்குமார் தோகா என்பவர் 2006 முதல் 2017 வரை சட்டவிரோதமாக கிணறுகள் அமைத்து சுமார் 73.18 கோடி ரூபாய் மதிப்புள்ள தண்ணீரை திருடிவிட்டதாக, திரிபுர பிரசாத் பாண்ட்யா என்பவர் மீது புகார் அளித்துள்ளார். இதற்காக சட்டவிரோத மீட்டர்களை பாண்ட்யா பயன்படுத்தி இருப்பதாகவும், இதுகுறித்த தகவல்களை தகவல் அறியும் உரிமைச்சட்டம்  வழியாக சுரேஷ்குமார் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக திரிபுரபிரசாத் பாண்ட்யா, அவரது மகன் பிரகாஷ் திரிபுரபிரசாத் பாண்ட்யா, அவரது உறவினர் மனோஜ் பாண்ட்யா மற்றும் டேங்கர் ஆபரேட்டர்கள் அருண் மிஸ்ரா, ஷ்ரவன் மிஸ்ரா, டிராஜ் மிஸ்ரா ஆகிய 6 பேர் மீதும் தற்போது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.