'மொத்த சக்தியையும் திரட்டிய இளம் பெண்கள்'.. ‘ஆனால் ஒரு காட்டு காட்டிய ஃபானி புயல்’.. வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாவெகு வேகமாக வீசும் புயலில் தங்கள் வீட்டுக் கதவை சாத்துவதற்கு கஷ்டப்படும் இளம் பெண்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுவரை வந்த புயல்களிலேயே ஃபானி புயல் மிகவும் கடுமையாக மக்களை இன்னலில் ஆழ்த்தியுள்ளதாக தேசிய ஊடகங்கள் விவாதித்து வரும் நிலையில், பலரும் புயலால் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
முன்னதாக சுமார் 10 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். ஆனாலும் பாதுகாப்பான முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்களும் புயலில் கஷ்டப்பட்டுள்ளனர். எனினும் புயலால் பாதிப்படைந்தவர்களை ஒப்பிட்டால், முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்கள் சற்றே பாதுகாப்பாக இருந்துள்ளனர்.
இதில் வீடுகளில் இருந்த பலரும் தத்தம் வீடுகளில் இருந்தபடியே புயலை வீடியோ பிடித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அப்படித்தான் ஒடிஸாவில் ஏழெட்டு பெண்கள் சேர்ந்து தங்கள் இருப்பிடத்தின் கதவை மூட முயற்சிக்கின்றனர். ஆனாலும் ஃபானி புயலின் தீவிரத்தன்மையை சமாளிக்க முடியவில்லை.
இருப்பினும் அத்தனை பேரும் சேர்ந்து அந்த கதவை ஒருவழியாக மூடிவிடுகின்றனர். ஆனால் அத்தனை பேரையும் ஒரு நொடியில் ஃபானி புயல் தூக்கி வீசியதோடு, மீண்டும் கதவு திறந்துவிடுகிறது. பெண்கள் அனைவரும் தங்கள் வீட்டின் உள்பக்கமாக விழுகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் பதைபதைப்பை கூட்டும் வகையில் வைரலாகி வருகிறது.
Brave girls try to close the door for their safety...#fani #cyclone @CNN @PMOIndia @CMO_Odisha pic.twitter.com/VhETR5Mbyo
— Naba Krushna (@nabina4ugmailc2) May 3, 2019