‘ அவசரமாக ஏற முயன்று தவறி விழுந்த பயணி’... ‘இடித்துக் கொண்டே சென்ற ரயில்’... ‘துரிதமாக செயல்பட்ட காவலர்’... ‘பதற வைக்கும் வீடியோ’!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மேற்கு வங்க மாநிலம், மிதுனபுரி ரயில் நிலையத்தில் ரயிலில் ஏற முயன்றபோது, நழுவி விழுந்தவரை உரிய நேரத்தில் ஆா்பிஎஃப் போலீசார் மீட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

‘ அவசரமாக ஏற முயன்று தவறி விழுந்த பயணி’... ‘இடித்துக் கொண்டே சென்ற ரயில்’... ‘துரிதமாக செயல்பட்ட காவலர்’... ‘பதற வைக்கும் வீடியோ’!

கரக்பூா் அருகே பாா்பெட்டியாவைச் சோ்ந்தவா் சுஜோய் கோஷ் (43). இவா் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் கரக்பூா்- அசன்ஸோல் பயணிகள் ரயிலில் ஏற முயன்றபோது, நழுவி விழுந்தாா். அப்போது, ரயில் படிக்கட்டுகள் அவரது தலையிலும், கால்களிலும் தாக்கிக் கொண்டே சென்றன. அப்போது, அங்கு வேகமாக ஓடிவந்த ஆா்பிஎஃப் காவலா் தா்மேந்திர யாதவ், சுஜோய் கோஷின் கால்களை பற்றி வெளியே இழுத்து மீட்டாா்.

இது பிளாட்பாரத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவிலும் இந்த காட்சி பதிவானது. இச்சம்பவத்திற்குப் பின் ரயில் நிறுத்தப்பட்டதையடுத்து, பயணிகள் விரைந்து வந்து , காவலருடன் சேர்ந்து சுஜோய் கோஷை மீட்டு மிதுனபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனர். தற்போது அவர் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.