‘அலையின் சீற்றத்தில் சிக்கிய ராணுவ அதிகாரி’.. மீட்க போராடிய இந்திய கடற்படையின் பரபரப்பு நிமிடங்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கடலில் விழுந்து உயிருக்கு போராடிய ராணுவ அதிகாரியை ஹெலிகாப்டர் உதவியுடன் கடற்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

‘அலையின் சீற்றத்தில் சிக்கிய ராணுவ அதிகாரி’.. மீட்க போராடிய இந்திய கடற்படையின் பரபரப்பு நிமிடங்கள்!

கோவாவில் ராணுவ அதிகாரி ஒருவர் பாறைகளுக்கு நடுவே நடந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கால் தவறி கடலில் விழுந்தார். அப்போது இருந்த அதிகபடியான அலையின் சீற்றத்தால் ராணுவ அதிகாரி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியான பாதுகாப்பு படை வீரர்கள் உடனடியாக கடற்படைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனை அடுத்து ஹெலிகாப்டருடன் சம்பவ இடத்துக்கு வந்த கடற்படையினர் உயிருக்குப் போராடிய ராணுவ அதிகாரியை மீட்க போராடியுள்ளனர். அப்போது பெய்த கனமழையாலும், கடல் அலையின் சீற்றத்தாலும் அவரை மீட்பதில் கடற்படையினருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஹெலிகாப்டரை ஒரே இடத்தில் நிலை நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சுமார் பத்து நிமிடங்கள் போராடி ராணுவ அதிகாரியை பத்திரமாக மீட்டுள்ளனர். இதனை அடுத்து உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு ராணுவ அதிகாரியை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

GOA, SEA, INDIANCOASTGUARD