‘கழுத்தளவு செல்லும் வெள்ளம்’.. ‘1 கி.மீ தலையில் தூக்கி குழந்தையை மீட்ட காவலர்’.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுஜராத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடத்தில் 2 வயது குழந்தையை, தலையில் ப்ளாஸ்டிக் கூடை வைத்து மீட்ட காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
குஜராத் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்தவரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மீட்பு குழுவினர் அனுப்பி வைத்து வருகின்றனர். இந்நிலையில் வதோதரா மாவட்டத்தில் உள்ள தேவிபுரா என்னும் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட 2 வயது குழந்தையை தலையில் ப்ளாஸ்டிக் கூடை வைத்து காவலர் கோவிந்த் சாவ்தா என்பவர் மீட்ட சம்பவம் அனைவரது பாரட்டையும் பெற்று வருகிறது.
இதுகுறித்து தெரிவித்த கோவிந்த் சாவ்தா, ‘தேவுபுரா பகுதியில் வெள்ளம் சூழ்ந்திருந்தது. வெள்ளம் கழுத்தளவு சென்றதால் நானும் எனது குழுவினரும் கயிறு கட்டி மக்களை மீட்டு வந்தோம். அப்போது ஒரு வீட்டில் தாயும், குழந்தையும் சிக்கி இருப்பது எங்களுக்கு தெரியவந்தது. அதனால் உடனே அங்கே சென்று பார்த்தபோது குழந்தையை கொண்டு செல்வதில் சிரமம் இருந்தது. இதனால் ஒரு ப்ளாஸ்டிக் கூடையில் துணிகளை வைத்து அதில் குழந்தையை பத்திரமாக வைத்தோம். பின்னர் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை கழுத்தளவு சென்ற வெள்ளத்தில் குழந்தையை என் தலையில் சுமந்து மீட்டு பாதுகாப்பான இடத்தில் சேர்த்தேன்’ என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி காவலர் கோவிந்த் சாவ்தாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
Video clip of rescue operation of baby of 45 days by cop Govind Chavda pic.twitter.com/vOgj3Fe6lv
— Dr. Shamsher Singh IPS (@Shamsher_IPS) August 1, 2019