‘அய்யா அது எங்க பரம்பரை சொத்து’.. அதிகாரிகளின் காலில் விழுந்து கெஞ்சிய விவசாயிகள்..! நெஞ்சை உலுக்கிய வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தங்களது சொந்த நிலங்களை மீட்டு தரக்கோரி அதிகாரிகளின் காலில் விழுந்து கெஞ்சும் விவசாயிகளின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘அய்யா அது எங்க பரம்பரை சொத்து’.. அதிகாரிகளின் காலில் விழுந்து கெஞ்சிய விவசாயிகள்..! நெஞ்சை உலுக்கிய வீடியோ..!

தெலுங்கானா மாநிலத்தில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் நோக்கில் நிலப்பத்திரங்கள் உள்ளிட்டவற்றை டிஜிட்டல் மயமாக்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் அம்மாநிலம் முழுவதும் நில ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன. இதில் நில பத்திரங்களை இணையத்தில் பதிவேற்றும் அதிகாரிகள் தவறு செய்யவதாகவும், அதனை திருத்த அணுகும்போது லஞ்சம் கேட்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளான சாத்தையா, லிங்கையா உள்ளிட்டோரது நிலங்களின் பட்டாவை ஆய்வு செய்தபின் அதனை அதிகாரிகள் வாங்கி சென்றதாக கூறப்படுகிறது. நிலங்களின் பட்டாவை திருப்பி கேட்டபோது பொய்வழக்கு பதிவு செய்துவிடுவதாக அதிகாரிகள் மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலங்கள் தங்களது முன்னோர்கள் காலத்தில் இருந்தே இருப்பதாகவும், இது தங்களது பரம்பரை சொத்து எனவும் அதிகாரிகளின் கால்களில் விழுந்து கெஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FARMERS, OFFICER, TELANGANA, LANDBACK, FEET