‘தண்ணீர் கேட்டு தர்ணாவில் ஈடுப்பட்ட பெண்ணை சரமாரியாக தாக்கிய பாஜக எம்.எல்.ஏ’.. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தண்ணீர் கேட்டு தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணை பாஜக எம்.எல்.ஏ தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘தண்ணீர் கேட்டு தர்ணாவில் ஈடுப்பட்ட பெண்ணை சரமாரியாக தாக்கிய பாஜக எம்.எல்.ஏ’.. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ!

தமிழகம் எங்கும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னை போன்ற பெரு நகரங்களில் மக்கள் தண்ணீருக்காக அங்குமிங்கும் குடத்துடன் அலையும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை குடிநீர் வாரியமும் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. ஆனாலும் தண்ணீருக்காக பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்து வண்ணம் உள்ளன.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள மேகனி நகர் என்னும் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறி, அப்பகுதி பாஜக எம்.எல்.ஏ அலுவலகம் முன்பு இளம்பெண் ஒருவர் தண்ணீர் பிரச்சனையை தீர்க்ககோரி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

இதனை அறிந்த பாஜக எம்.எல்.ஏ., பால்ராம் தவாணி என்பவர் அப்பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் அவருடன் இருந்த சிலரும் அப்பெண்ணை தாக்கியுள்ளனர். இதனை அங்கே இருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டடுள்ளார். இதனைப் பார்த்த பலரும் இதற்கு கண்டனங்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான பெண் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

BJP, MLA, WATERSCARCITY, WOMEN