‘100 கிமீ நடைபயணம்’.. சாலையில் பிரசவ வலியால் துடித்த நிறைமாத ‘கர்ப்பிணி’.. குழந்தை பிறந்த ‘சில நிமிடத்தில்’ நடந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சொந்த ஊருக்கு நடந்த சென்றபோது கர்ப்பிணி பெண்ணுக்கு பிறந்த குழந்தை சில நிமிடங்களில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘100 கிமீ நடைபயணம்’.. சாலையில் பிரசவ வலியால் துடித்த நிறைமாத ‘கர்ப்பிணி’.. குழந்தை பிறந்த ‘சில நிமிடத்தில்’ நடந்த சோகம்..!

பிகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஜதின் ராம் (19)-பிந்தியா (18) தம்பதியினர். இவர்கள் பஞ்சாப் மாநிலம் லூதியானா நகரில் உள்ல தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் திடீரென ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அவர்கள் தொழிற்சாலை மூடப்பட்டது. இதனால் வேலையின்றி தவித்த அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்து சிறப்பு ரயிலில் முன்பதிவு செய்ய முயன்றுள்ளனர். ஆனால் அவர்களுக்கு பயணசீட்டு கிடைக்கவில்லை.

இதனால் நடந்தே சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்தனர். அதன்படி கடந்த வாரம் லூதியானவில் இருந்து தனது 9 மாத கர்ப்பிணி மனைவியுடன் ஜதின் ராம் நடக்க ஆரம்பித்துள்ளார். சுமார் 100 கிலோமீட்டர் தூரம் நடந்து ஹரியாணாவின் அம்பாலா நகரை அடைந்துள்ளனர். அப்போது பிந்தியாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு துடித்துள்ளார். உடனே அருகில் இருந்த காவலர்களின் உதவியுடன் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்த சிறிது நேரத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. போதிய ஊட்டச்சத்து இல்லாததால் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைக் கேட்ட கணவனும், மனைவியும் கதறியழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்