குழம்பித் தவித்த போலீஸ்.. அடையாளம் காட்டிய வாக்கு மையும் டாட்டூவும்.. பதறவைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மும்பை காட்கோபர் பகுதியில் கடந்த மாதம் முதல் வாரம், அடையாளம் தெரியாத நபரின் சிதைந்த முகத்துடன் கூடிய சடலம் மீட்கப்பட்டது.

குழம்பித் தவித்த போலீஸ்.. அடையாளம் காட்டிய வாக்கு மையும் டாட்டூவும்.. பதறவைக்கும் சம்பவம்!

முகம் சிதைந்த நிலையில், மீட்கப்பட்ட அந்த நபருக்கு நேர்ந்தது கொலையா? விபத்தா? என போலீஸார் குழம்பித் தவித்த நிலையில்தான் அதே பகுதியைச் சேர்ந்த சபியுல்லா குரேஷி மற்றும் நியாஸ் சவுத்ரி ஆகிய 2 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி, போதைப் பொருட்களுக்கு அடிமையான இவர்கள் 2 பேரும், சாலையில் நடந்து சென்ற இந்த முகமறியா வாலிபரை பணத்துக்காக அடித்துத் துன்புறுத்தியதும், முகத்தை கல்லால் அடித்து சிதைத்ததும் தெரிய வந்ததை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அதே சமயம் பாதிக்கப்பட்டவரின் முகம் சிதறுண்ட நிலையில் இருப்பதால், அந்நபர் யார்? எந்தவூரைச் சேர்ந்தவர் என்பது கண்டுபிடிக்க முடியாத குழப்பம் தொடர்ந்தது. அப்போதுதான் அவரின் கையில் இருந்த வாக்கு மையை வைத்தும், அவருடைய உடலில் இருந்த சிலுவை மற்றும் B,K என்கிற ஆங்கில எழுத்துக்களை வைத்தும் அதே ஊரின் வாக்காளர் பட்டியலை போலீஸார் சோதித்துள்ளனர். 3.5 லட்சம் பேர் கொண்ட அந்த பெரிய வாக்காளர் பட்டியலில் B, K எழுத்துகளில் தொடங்கும் பெயர்களையும், கையில் உள்ள வாக்கு மை அடையாளத்தையும் வைத்து 125 பேரை இறுதியாக உறுதிப்படுத்தி அவர்களின் வீட்டில் விசாரித்ததில், மன்கஹர்ட் பகுதியைச் சேர்ந்த கிரண் வான்கடேதான் இறந்து போன நபர் என தெரியவந்தது.

அந்த நபரின் வீட்டில் இருந்த அவரது தாயார், தன் மகனின் உடலில் இருந்த டாட்டூ படங்களைக் கண்டதுமே அடையாளங்கண்டு அழத் தொடங்கிவிட்டதாகவும், காதலியின் நினைவாக உடலில் டாட்டூ வரைந்திருந்ததாலும், கையில் இருந்த வாக்கு மையினாலும் அவர் யார் என்று கண்டுபிடிக்க முடிந்ததாக போலீஸார் கூறியுள்ளனர்.

CRIME, MURDER, POLICE